உச்ச கட்டம்..! - நயன்தாரா பத்தி இந்த மேட்டரு தெரியுமா..? - பரபரக்கும் திரையுலகம்..!
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளவம் வாங்கும் நடிகை நயன்தாரா தான் என்று கோலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன. தமிழில் ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் 5 கோடி வரை சம்பளமாக வாங்குவதாகச் சொல்கிறார்கள்.
மற்ற முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட இது இரு மடங்கு அதிகமும் என்பது கூடுதல் தகவல். தெலுங்கில் நயன்தாரா தற்போது சிரஞ்சீவி நடிக்கும் 'காட்பாதர்' படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்காக நயன்தாராவிற்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாள 'லூசிபர்' படத்தின் ரீமேக் தான் இந்த 'காட்பாதர்'. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் தான் நயன்தாரா நடிக்கிறார்.
படம் முழுவதும் இடம் பெறாத குறைவான காட்சிகள் கொண்ட கதாபாத்திரம்தான். இருந்தாலும் நயன்தாராவைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என சிரஞ்சீவி சொன்னதாக டோலிவுட்டில் தகவல் உண்டு. அதனால்தான் இவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்கிறார்களாம்.
தெலுங்கில் ஒரு படத்திற்காக ஒரு கதாநாயகிக்கு கொடுக்கப்பட்டுள்ள உச்ச கட்ட சம்பளம் இது என்கிறார்கள். இதனால், சக நடிகைகள் புகைச்சலில் இருக்கிறார்களாம். இதனால், திரையுலகமே பரபரத்து வருகிறதாம்.