அட்ராசக்க..! - "மாநாடு : 2" குறித்து வெங்கட்பிரபு கூறிய சுவாரஸ்ய தகவல்..!
'ஈஸ்வரன்' படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் ’மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். பல்வேறு தடைகளையும் நெருக்கடிகளையும் கடந்து ‘மாநாடு’ கடந்த 25 ஆம் தேதி வெளியானது.
எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் வெளியாகாமல் ஒர்க்கிங் நாளில் வெளியாகியே படம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாய் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
வெற்றிப் படமாக அமைந்துள்ளதாக இதுவரை வெளியான விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் இயக்குநர் வெங்கட் பிரபு நேற்று நன்றி தெரிவித்து ட்விட்டர் ஸ்பேஸில் உரையாடியானார்.
அப்போது பேசியவர், “மாநாடு படத்தில் எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தெலுங்கு நடிகர் ரவி தேஜாவைத்தான் அணுகினோம். அவர், பிஸியாக இருந்ததால் எஸ்.ஜே சூர்யா நடித்தார்.
ஆனால், தற்போது ரவிதேஜா படத்தைப் பார்த்துவிட்டு ‘மாநாடு’ தெலுங்கில் எடுத்தால் நான் நிச்சயம் எஸ்.ஜே சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் ‘மாநாடு’ இரண்டாம் பாகம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு பேசியுள்ளார்.
‘மாநாடு’ படம் குறித்த ட்விட்டர் ஸ்பேசஸ் கலந்துரையாடல் நேற்று (நவ.30) நடந்தது, இதில் வெங்கட் பிரபு பேசியதாவது: படத்தில் நடைபெறும் டைம் லூப்பின் மூலாதாரமே அப்துல் காலிக் கதாபாத்திரம் தான். படத்தின் இறுதியில் அந்த லூப் மீண்டும் நிகழ்வதாக ஒரு காட்சியை நாங்கள் வைத்திருந்தோம்.
அப்படியென்றால் வில்லன் தனுஷ்கோடியும் மீண்டும் உயிருடன் வந்துவிடுவார். காரணம் அவர்கள் இருவரது ஆன்மாவும் இணைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
ஏற்கெனவே ஒரு பேட்டியில் ‘மாநாடு’ படத்தின் எடிட்டர் பிரவீன் கேஎல் ‘மாநாடு 2’ படத்துக்கான கதையை இயக்குநர் வெங்கட் பிரபு ஏற்கெனவே தயார் செய்து விட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.