"விடுமுறையே இல்லாமல் தாய் வேலை செய்கிறாள்.." - AK குரலில் ஆரம்பிக்கும்.. மனதை கனக்கவைக்கும் "வலிமை" 2nd சிங்கிள்..!
ஹெச். வினோத் இயக்கத்தில் AK நடித்திருக்கும் வலிமை படத்தில் வந்த வேற மாறி பாடல் வெளியாகி ஹிட்டானது. இதையடுத்து அம்மா பாசத்தை கொண்டாடும் சென்டிமென்ட் பாடல் டிசம்பர் 5ம் தேதி மாலை வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள்.
இதையடுத்து இன்று காலையில் இருந்தே அந்த பாடல் பற்றி சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது AK மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். இதையடுத்தே அம்மாவை கொண்டாடும் பாடலை ஜெயலலிதா அம்மாவின் நினைவு நாள் அன்று வெளியிடுகிறார்கள் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.
இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள்வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் எழுதியுள்ள பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். 'நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ' என AK பேசுவதைத் தொடர்ந்து, பாடலும் அப்படியே ஆரம்பிக்கிறது.
இதைக்கேட்ட ரசிகர்கள் இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர்.
அம்மா-வை பற்றி பாடல் பாடினால் யாருக்கு தான் பிடிக்காது. பாடல் இடையில், விடுமுறையே இல்லாமல் தாய் வேலை செய்கிறாள், இதற்கான காணிக்கையாய் நான் என்ன தான் தருவதோ..? என்ற வரிகள் ஒவ்வொரு மகன், மகளின் இதயத்தை கணக்க செய்யும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
இதோ அந்த பாடல்,