அவர் படத்துல வில்லனா..? - தெறித்து ஓடும் நடிகர்கள்..! - டீவி நடிகர் அப்செட்..!
சமீப காலமாக தமிழ் சினிமா இயக்குனர்கள் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள்.ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து.. காட்சிகள் மற்றும் நடிகரை தேர்வு செய்து நடிக்க வைத்தால் படம் ஹிட்டு.. என்பது தான் அது.
இதனால், ஹீரோக்களை வில்லன்களாக இறக்கி வருகிறார்கள். தளபதி நடிகரில் ஆரம்பித்து, டீ.வி நடிகர் தொட்டு, விரல் நடிகர் வரை என பல பேர் ஹீரோவாக நடித்து வந்த நடிகர்களை வில்லனாக்கி படத்தை ஹிட் ஆக்கி விட்டார்கள்.
அதிலும், டீ.வி நடிகர் இதை சக்சஸ் ஃபார்முலா என நம்புகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான வைத்தியர் படத்தில் சாக்லேட் பாய் என பேரெடுத்த ஒரு ஹீரோவை வில்லனாக்கி வெற்றியும் கண்டார்.
இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்திலும் ஒரு ஹீரோவை வில்லனாக நடிக்க வைக்க அலையாய் அலைந்து வருகிறாராம். பாலிவுட்டில் இருந்து ஒரு ஹீரோவை வில்லனாக இறக்குறேன் என கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றினார், ஆனால், எதுவும் எடுபடவில்லை.
இதனை தொடர்ந்து, தெலுங்கில் ஹீரோவாக கலக்கி வரும் இளம் நடிகர்கள் இவருக்கு மிகவும் நெருக்கம் என்பதால் அவர்களிடம் அணுகியுள்ளார். ஆனால், நாங்கள் ஹீரோவாக மட்டும் தான் நடிப்போம் என சிரித்துக்கொண்டே கூறி விட்டார்களாம்.
நல்ல கதை, ஹீரோவுக்கு நிகரான ஸ்க்ரீன் ஸ்பேஸ் என இருந்தும் இப்படி நடிகர்கள் தவிர்த்து விடுவதால் அப்செட்டில் உள்ளதாம் படக்குழு. ஆனாலும், விடாப்பிடியாக ஒரு ஹீரோவை வில்லனாகியே தீருவது என்ற முடிவில் இருக்கிறாராம் டீவி நடிகர்.
யார் இந்த வேட்டையில் சிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.