சர்ச்சையில் சிக்கிய அமலா பால்..! - இதைத்தான் மேயுற மாட்டை. நக்குற மாடு கெடுத்துச்சுன்னு சொல்லுவாங்களோ..!

 
திரைத்துறையில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நடிகை என பெயர் எடுத்தவர் அமலா பால். அவர் நடித்த முதல் திரைப்படமான சிந்துசமவெளியே ஒரு சர்ச்சைக்குரிய திரைப்படமாகும். முதல் திரைப்படமே சர்ச்சை என்பதாலே என்னமோ இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிவருகிறார். 
 
சமீபமாக இணையத்தில் அடிக்கடி சர்ச்சைக்கு ஆளாகிறார் அமலாபால். அமலாபாலுடன் திருமணம் செய்ததாகத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டார் அவரது நண்பர் பாவ்னிந்தர் சிங். ஆனால், சர்ச்ஹ்சைக்கு பிறகு அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கிவிட்டார். 
 
மைனா திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் பிஸியான நடித்து வந்தார் அமலாபால். இவர் கடைசியாக ஆடை திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடி கொண்டிருக்கிறார் அமலாபால். 
 

ஆண் என்ன செய்கிறான்..?

 
 
தற்போது, இவர் வசம் அதோ அந்த பறவை போல திரைப்படம் மட்டுமே உள்ளது. அந்த வகையில், தற்போது பெண் பிரசவத்தில் கஷ்டப்படுகிறாள், ஆண் என்ன செய்கிறான் என அமலாபால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
தொடர்ந்து அவர் கூறியுள்ளதாவது, ஏனென்றால் பெண் அடிமைத்தனத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறாள், பெண் அவமானங்களைச் சந்தித்திருக்கிறாள், பெண் பொருளாதாரச் சார்பால் பாதிக்கப்பட்டிருக்கிறாள், எல்லாவற்றுக்கும் மேலாக, தொடர்ந்து கர்ப்பம் தரிப்பது என்ற நிலையால் அவதிப்பட்டிருக்கிறாள். பல நூற்றாண்டுகளாக அவள் வலி, வலியில் மட்டும் வாழ்ந்திருக்கிறாள். 
 

முதல் குழந்தை பிறந்ததும்.. உடனே..!

 
 
அவளுக்குள் வளரும் குழந்தை அவளைச் சாப்பிட விடுவதில்லை. அவளுக்கு எப்போதும் குமட்டலும், எப்போது சாப்பிட்டதை வெளியே எடுப்போமோ என்ற உணர்வும் இருக்கும். 
 
குழந்தை 9 மாதங்கள் வளர்ந்த பின், குழந்தை பிறப்பு என்பது கிட்டத்தட்ட ஒரு பெண்ணின் இறப்புதான். ஒரு பிரசவம் முடிந்த பிறகு சிறிது நாட்கள் கூட ஓய்வு தராமல், உடனே அவளது கணவன் அவளை இரண்டாம் முறை கர்ப்பமாக்கத் தயாராக இருக்கிறான். 
 
பெண்ணின் ஒரே வேலை மக்கள் கூட்டத்தை உருவாக்கும் தொழிற்சாலை போல இருப்பதுதான் என்பது போலத் தெரிகிறது. ஆணின் வேலை என்ன? ஆண் வலியில் பங்கெடுக்க மாட்டான். 9 மாதங்கள் பெண் கஷ்டப்படுகிறாள், பிரசவத்தில் கஷ்டப்படுகிறாள். 
 

பெண்ணை பற்றி ஆண்களுக்கு கவலையில்லை

ஆண் என்ன செய்கிறான்? ஆணைப் பொறுத்தவரை, அவன் பெண்ணைத் தனது காமத்தை, பாலியல் தேவைகளைத் தீர்த்து வைக்கும் பொருளாக மட்டுமே உபயோகப்படுத்துகிறான். அதனால் பெண்ணுக்கு என்ன விளைவுகள் ஏற்படும் என்பது பற்றியெல்லாம் அவனுக்குச் சுத்தமாகக் கவலையில்லை. 
 
ஆனாலும் அவன் தொடர்ந்து 'நான் உன்னைக் காதலிக்கிறேன்' என்று சொல்வதைத் தொடர்வான். அவன் உண்மையிலேயே அவளைக் காதலித்திருந்தால், இந்த உலகத்தில் மக்கள்தொகை அதிக அளவில் பெருகியிருக்காது. அவன் சொல்லும் காதல் என்ற வார்த்தை வெறுமையானது. அவளை ஒரு கால்நடை போலத்தான் நடத்தியிருக்கிறான்'' என்றுகூறி சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார் அம்மணி.
 

மேயுற மாட்டை. நக்குற மாடு கெடுத்துச்சு

 
இதனை கேட்ட ரசிகர்கள், நீங்கள்.. திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ளாமல் விவாகரத்தும் வாங்கி விட்டீர்கள். ஆனால், கணவருடன் ஒழுங்காக வாழ்ந்து கொண்டு, குடும்பத்தை, பரம்பரையை விருத்தி செய்யும் பெண்களையும் இது போன்ற கழிசடை கருத்துகளை கூறி கெடுத்துவிடுவீர்கள் போல இருக்கே.. இதைத்தான் மேயுற மாட்டை. நக்குற மாடு கெடுத்துச்சுன்னு சொல்லுவாங்க போல.. என விளாசி வருகிறார்கள்.


Blogger இயக்குவது.