"என்னங்க ஆச்சு உங்களுக்கு.. இப்படி இறங்கிட்டீங்க.." - கவர்ச்சி உடையில் ரசிகர்களை பதற வைத்த வைஷாலி...!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் ஹீரோ கார்த்தியின் தங்கையாக நடித்து பிரபலமானவர் வைஷாலி தனிகா. சென்னையை சேர்ந்த இவர் மாலை நேரம் என்ற குறும்படம் மூலம் அறிமுகமானார்.
அதன்பிறகு கதக்களி திரைப்படத்தில் நடித்தார். பிறகு விஜய்டிவியின் மாப்பிள்ளை சீரியலில் ஸ்ரீஜாவின் தங்கையாக நடித்தவர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்துள்ளார்.
விஜய் நடித்த சர்க்கார், சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, சீமராஜா, பிரபுதேவாவின் யங் மங் சங் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். தற்போது ஜீ தமிழின் கோகுலத்தில் சீதை தொடரில் நடித்து வருகிறார்.
வைஷாலியின் இன்ஸ்டா பதிவுகள் எல்லாம் இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துக்கும் விதமாகவே அமைத்துள்ளது. அந்த வகையில், தற்போது கவர்ச்சி உடையில் ரீல்ஸ் ஒன்றை விட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள், என்னங்க ஆச்சு உங்களுக்கு..? இப்படி இறங்கிட்டீங்க.. என்று வாயை பிளந்து வருகிறார்கள்.