"இந்த வயசுலயும் இப்படியா...?..." - இணையத்தை கலக்கும் காவ்யா மாதவன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

 
பிரபல மலையாள நடிகை காவ்யா மாதவன் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்த மலையாள நடிகர் திலீப்புக்கும், நடிகை காவ்யா மாதவனுக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. திலீப்புக்கு மஞ்சு வாரியர் மூலம் மீனாட்சி என்ற மகள் உள்ளார். 
 
இந்நிலையில் காவ்யா கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர் கர்ப்பமாக இருப்பதால் தான் நடிகை கடத்தல் வழக்கில் போலீசார் அவரின் வீட்டிற்கே சென்று விசாரித்தார்களாம். பிரபல நடிகை கடத்தி மானபங்கப்படுத்தப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திலீப் ஆலுவா சிறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த வழக்கில் காவ்யாவுக்கும் தொடர்பு உள்ளது என்று போலீசார் சந்தேகித்தனர். விசாரணையின்போது காவ்யா மாதவன் அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லையாம். இப்போது திலீப் ஜாமீனில் இருக்கிறார். காவ்யா மாதவன் திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை. 
 
 
சமீபத்தில் அவர் கர்ப்பம் அடைந்து இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து காவ்யா மாதவனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கேரளாவில் உள்ள அவரது வீட்டில் நடந்தது. காவ்யா மாதவன் மஞ்சள் கவுன் அணிந்து இருந்தார். நெருங்கிய உறவினர்கள் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 
 
 
இந்த நிகழ்ச்சியில் காவ்யா மாதவன் தனது 34–வது பிறந்த நாளையும் கேக் வெட்டி கொண்டாடினார். ஆழப்புழையில் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருந்த திலீப் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 
 
முதல் மனைவி மஞ்சுவாரியருக்கு பிறந்த திலீப்பின் மகள் மீனாட்சியும் இதில் பங்கேற்றார். குழந்தை பிறந்த பின்பு மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என கூறியிருந்தா காவ்யா மாதவன் தற்போது நெருங்கிய இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறாராம். 


மேலும், தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களையும் இணையத்தில் அப்லோடி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறார் அம்மணி.
Powered by Blogger.