வட இந்தியாவில் "மாநாடு" திரைப்படம் ஹிட்டா..? ஃப்ளாப்பா..? - வெளியான உண்மை தகவல்..!

 
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாநாடு'. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். 
 
இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவுக்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
 
இத்தனை நாள் கொண்டாட்டம் போடாத ரசிகர்கள் இப்போது தாறுமாறான உற்சாகத்தோடு கொண்டாட்டம் போடுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை படம் ரூ. 40 கோடியை எட்டியுள்ளது, தயாரிப்பாளருக்கு படம் லாபத்தை கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. 


இங்கே செம ஹிட் ஆனால் வட இந்தியாவில் சிம்பு மாநாடு படம் ஜெயித்ததா என்ற கேள்வி ரசிகர்களிடம் இருக்கும். அங்கேயும் சிம்புவின் மாநாடு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். அங்கு படத்தை விநியோகம் செய்தவர்கள் அவர்களது டுவிட்டரில் உண்மை நிலவரத்தை கூறியுள்ளனர். 
Powered by Blogger.