தாறு மாறு.. ஸ்லீவ்லெஸ் உடையில்.. ஒரு சைஸாக போஸ் கொடுத்து.. இணையத்தை சூடேற்றிய நிவேதா பெத்துராஜ்..!

 
'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். 
 
இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை. 
 
 
இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. எனவே வேறு வழியின்றி மீண்டும் தமிழுக்கே திரும்பினார். 
 
 
எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்த நிலையில் அவ்வப்போது துளியும் கவர்ச்சி காட்டாத அளவிற்கு சல்வாரிலும் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். 
 
 
சமீபத்தில் இவர் நடிகர் பிரபு தேவாவுக்கு ஜோடியாக நடித்த 'பொன் மாணிக்கவேல்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் தற்போது, வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி', விஷ்ணு விஷாலின் 'ஜெகஜால கில்லாடி', என அடுத்தடுத்து படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன. 


அதே போல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வரும் இவர்... தற்போது அழகிய பார்பி பொம்மை போல் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. புசு புசுவென இருக்கும்... ஸ்லீவ் லெஸ் உடையை தாறு மாறாக காற்றில் மறக்க விட்டபடி, கொள்ளை அழகில் ஜொலிக்கிறார் நிவேதா...
Blogger இயக்குவது.