"என்ன கன்றாவி இது...?.." - ஒரே ஷாட்டில் மொடக்குன்னு குடித்த... ராகுல் பரீத் சிங்..! - எதோ டைரக்டர் ரெசிபியாம்..?


தமிழ்,ஹிந்தி,தெலுங்கு என பல மொழிகளில் பிரபலமான நடிகையாக உள்ள நடிகை ரகுல் பிரீத் சிங் இப்பொழுது டைரக்டரின் ரெசிபி என எதையோ குடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7 ஜி ரெயின்போ காலனி கன்னட ரீமேக் கில்லியில் நடித்து முதல் முறையாக சினிமாவில் அறிமுகமான நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழுக்கு தடையற தாக்க மூலம் அறிமுகம் செய்யப்பட்டார் . 
 
தமிழில், நடிகர் கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் தேவ் என அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களில் நடித்து இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகி இடத்தை பிடித்துள்ளார். கடைசியாக என்ஜிகே திரைப்படத்தில் நடித்தார். நீண்ட காலமாக இழுபறியில் இருக்கும் இந்தியன்2ல் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. 
 
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 விரைவில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது. சிவகார்த்திகேயனுடன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள அயலான் அனைத்து கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிந்து இப்பொழுது கிராபிக்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. 
 
அயலான் மற்றும் இந்தியன்2 என்ற இரண்டு பிரமாண்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் ரகுல் பிரீத் சிங் டைரக்டர் ரெசிபி... சிங்கிள் ஷாட்ல குடிச்சிட்டேன்.. எனக்கு ரொம்ப புடிச்ச ரெசிபி.. என கூறி எதையோ ஒரே முழுங்கில் மொடக்கென குடித்த வீடியோ ஒன்றை வெளியிட்டு வைரல் ஆகி உள்ளார். 

 
இதனை பார்த்த ரசிகர்கள், என்ன கன்றாவி இது..? என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Powered by Blogger.