"சும்மாவா சொன்னாங்க.. அரேபியக்குதிரை-ன்னு.." - கவர்ச்சி உடையில் அனுஷ்கா - புலம்பும் ரசிகர்கள்..!
தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலாமானவர் நடிகை அனுஷ்கா. தென்னிந்திய சினிமாவில் விஜயசாந்திக்குப் பின்னர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடித்து புதிய அத்தியாயத்தையும் உருவாக்கியவர்.
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பல முனனணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் அனுஷ்கா. 39 வயதாகும் அனுஷ்காவின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவல் கசிந்து பின்னர் அவர் அதனை மறுப்பதும் வாடிக்கையாகி வருகிறது.
அந்த வகையில் பாகுபலி நடிகர் பிரபாஸை அனுஷ்கா திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவியது. ரசிகர்களும் இவர்களது ஜோடி பொருத்தம் அருமையாக இருக்கும் என, சமூக வலைத்தளத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். ஆனால் அனுஷ்கா தரப்பில் இருந்து இந்த செய்திக்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
அதே நேரத்தில் அனுஷ்காவின் திருமணத்திற்கு தீவிரமாக மாப்பிள்ளை வேட்டையை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டது. திருமண தடை நீங்க பெற்றோர் கூறிய அனைத்து பூஜை புனஸ்காரம் செய்து வந்த அனுஷ்கா, வழிய வந்த படவாய்ப்புகளையும் ஏற்காமல் இருந்தார். ின்னர் மீண்டும் சைலன்ஸ் என்கிற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவரது கை வசம் எந்த படங்களும் இல்லை என்றாலும் தனக்கு ஏற்றபடி மாப்பிள்ளை அமைந்தால் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உள்ளார். தீவிரமாக மாப்பிள்ளை தேடி வரும் பெற்றோரிடம், ஒரே ஒரு கண்டிஷன் தான் போடுகிறாராம் அனுஷ்கா.
தன்னுடைய வருங்கால கணவர் மிகப்பெரிய பணக்காரராக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவர் 6 அடி உயரமாக தன்னுடைய உயரத்துக்கு ஏற்ற போல் இருக்க வேண்டும் என கூறியுள்ளாராம். அனுஷ்காவின் இந்த ஆசையும் நியாயம் தானே... இதை பேராசை என கூறமுடியாது.
எது எப்படி இருந்தாலும் அவர் எதிர்பார்ப்பது போல், அடுத்த வருடத்திலாவது மாப்பிள்ளை கிடைப்பாரா? என பொறுத்திருந்து பார்ப்போம். இந்நிலையில், இளமை காலத்தில் தனது இளமையை போட்டோ சூட் மூலமாக ரசிகர்களின் கண்களுக்கு பரிமாறியுள்ள அவரது சூடான புகைப்படங்கள் இப்போதும் சூடாகவே உள்ளன.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், சும்மா சொன்னாங்க.. அரேபியக்குதிரை-ன்னு.. என புலம்பி வருகிறார்கள்.