"துளி மேக்கப் இல்லாமல்... கையை குத்த வைத்து போஸ்.." - ப்ரியா பவானியை பார்த்து.. கிறங்கிய ரசிகர்கள்..!

 
இதுவரை கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் வர வர கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார். களத்தில் சந்திப்போம் வெற்றிபெற்ற பிறகு மீண்டும் இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் திரைப்படங்களில் சென்டிமென்ட் ரீதியாக ஒப்பந்தமாகி வருகிறார். 
 
குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை வசியம் செய்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் இப்போது குட்டி டவுசரில் குந்த வைத்து உட்கார்ந்துகொண்டு இருக்கும் லவ்லியான போட்டோக்களை பகிர்ந்துள்ளார். 
 
தெலுங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த பெல்லி சூபுளு திரைப்படம் தமிழில் ஓ மணபெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட அதில் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். 
 
 
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நகைச்சுவைத் திரைப்படமான ஆடி கப்யாரே கோட்டமணி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் அசோக் செல்வன் உடன் முதன் முறையாக ஜோடி போட்டு நடித்து இருக்க இதன் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்து படக்குழு அறிவித்து புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
 
 
தற்போது இவரது கைவசம் சுமார் 10 படங்கள் உள்ளது. அடுத்தடுத்து பல படங்களில் இவரை நடிக்க வைக்கவும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் முயற்சித்து வருகிறார்கள். திரைப்படங்கள் நடிப்பதில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும், மற்றொரு புறம்... சோசியல் மீடியாவிலும் அம்மணி படு ஆக்ட்டிவாக இருந்து கொண்டு இருப்பவர். 
 
 
எங்கு சென்றாலும், தன்னுடைய மெருகேறிய அழகை புகைப்படமாக எடுத்து வெளியிட்டு ரசிகர்களை பரவசப்படுத்துகிறார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் வேற லெவலுக்கு ரசிகர்களிடம் ரீச் ஆகியுள்ளது.


இந்த புகைப்படங்களில் துளியும் மேக்அப் இன்றி பளீச் புன்னகையை உதிர்க்கிறார் பிரியா பவானி ஷங்கர். இந்த போடோஸை பார்த்து ரசிகர்கள் தாறு மாறாக இவரது அழகை வர்ணித்து வருகிறார்கள்.
Blogger இயக்குவது.