முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்..??? - ஏங்கி கிடக்கும் ரசிகர்கள்..!

 
விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். 
 
அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். 
 

முதன் முறையாக டூ பீஸ் பிகினி உடையில்...

இவர் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் தீபாவளி அன்று ரீலீஸ் ஆகி எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் சறுக்கியது. அடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்த ராங்குதே என்ற படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று உள்ளது. 
 

தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலிவுட் படத்தில் கீர்த்தி சுரேஷ்.. டூ பீஸ் நீச்சல் உடையில் நடிக்க ஒத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் குஷியாக காத்துக் கொண்டிருந்தார்கள். 
 

மறுத்த கீர்த்தி சுரேஷ்..

 
ஆனால் கீர்த்தி சுரேஷ் வட்டாரத்தில் விசாரித்தால் “மேடம் ஒரு போதும் நீச்சல் உடையில் நடிக்க மாட்டார் என்றும், இந்த செய்திகள் தவறானது என்று யாரும் நம்ப வேண்டாம்” என கூறிவிட்டார்கள். இந்த பதிலால், ரசிகர்கள் ஏங்கி கிடக்கிறார்கள்
Blogger இயக்குவது.