லப்பர் பந்து கெத்து பொண்டாட்டியா இது..? நீச்சல் உடையில் தாறு மாறு கிளாமர் காட்டுறாங்களே..!
நடிகர்கள் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார் நடிகை சுவாசிகா.
இந்த படத்தில் அட்டகத்தி தினேஷுக்கு மனைவியாகவும் திருமண வயதில் இருக்கும் பெண்ணுக்கு அம்மாவாகவும் ஹரிஷ் கல்யாணத்துக்கு மாமியாராகவும் நடித்திருந்தார் நடிகை சுவாசிகா.
இதில் கொடுமை என்னவென்றால் சுவாசிக்காவுக்கு வயது 31 தான் ஆகிறது. ஆனால் ஹரிஷ் கல்யானுக்கு வயது 34 ஆகிறது.
அதாவது, 34 வயதான ஹீரோவுக்கு 31 வயதான ஒரு இளம் நடிகை மாமியாராக நடித்திருக்கிறார் என்பது தான் கூத்து.
இது குறித்து மீம்கள் இணையத்தில் வைரலாகி வருவதை நீங்கள் பார்த்திருக்கலாம். கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வைகை என்ற திரைப்படத்தில் உமா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ஆனால், இந்த திரைப்படத்தில் இவருடைய பெயர் விசாகா என்று அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த பெயர் ராசி இல்லாத காரணத்தினால் சுவாசிகா என்று தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
தொடர்ந்து கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் இவருக்கு மலையாளத்தில் பட வாய்ப்புகள் குவிக்கின்றன.
கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் 25க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறி இருக்கிறார்.
இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் தான் திருமணம் செய்து கொண்டார்.
தேனிலவுக்காக தன்னுடைய கணவருடன் மாலத்தீவு சென்றிருக்கும் அவர் அங்கே தன்னுடைய கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளை இணையத்தில் பதிவிட்டு சிங்கிள் பசங்க வயிற்றில் புகைச்சலை கிளப்பி வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்யும் ரசிகர்கள் பதிவிட்டுக் கொண்டிருக்க மறுபக்கம் இவருக்கு திருமண வாழ்த்துக்களையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள் ஒரு தரப்பு ரசிகர்கள்.