பின்னாடி அடிவாங்கியே பிரபலமான நடிகை - மூன்றே நாளில் ரூ.105 கோடி!!



நடிகை ஊர்வசி ரவுடிலா: 

பாலிவுட் சினிமாவில் பிரபலமான கவர்ச்சி நடிகையாக இருந்து வருபவர் தான் ஊர்வசி ரவுடிலா. இவர் பல்வேறு ஹிந்தி திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமான கவர்ச்சி நடிகையாக பார்க்கப்படுகிறார்.

குறிப்பாக ஒரே ஒரு பாடலுக்கு ஐட்டம் நடனமாடி அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் ஊர்வசி ரவுடிலா  இருந்து வருகிறார்.

இவர் ஹிந்தி சினிமா மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளிவந்த தி லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் ஊர்வசி ரவுடிலா நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது .

பாலகிருஷ்ணாவுடன் நடனம்: 

ஊர்வசி ரவுடிலா பெரும்பாலும் திரைப்படத்தில் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் கேட்பதைவிட பல மடங்கு அதிகமாக கவர்ச்சி வாரி இறைப்பதாலே இவரது மார்க்கெட் கிடு கிடுவென மிக குறைந்த காலத்திலேயே உச்சத்திற்கு சென்று விட்டது.

தற்போது தெலுங்கு சினிமாவில் பாலகிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்துள்ள டாக்கு மகாராஜ் திரைப்படத்தில் ஊர்வசி ரவுடிலாவோடு நடனம் ஆடியிருப்பது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.  இந்த திரைப்படத்தில் பாலகிருஷ்ணா, ஸ்ரத்தா ஸ்ரீநாத், பாபி தியோல் உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் நடித்திருக்கிறார்கள் .

பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளிவந்த இந்த திரைப்படம் வெளிவந்த மூன்று நாட்களிலேயே 150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் ஊர்வசி ரவுடில்லா சேர்ந்து நடனமாடிய ஆட்டம் ஒட்டுமொத்த இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பின்னாடி அடிவாங்கியே பிரபலம்: 




இந்த நடனம் நெட்டிசன்களால்  மிகப்பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டாலும் பாலகிருஷ்ணா ரசிகர்களால் அது பெருவாரியாக ரசிக்கப்பட்டு வருகிறது. ஆம் ரஜினி, கமல்ஹாசன் ரேஞ்சுக்கு தெலுங்கு சினிமாவில் பேசப்படும் ஹீரோவாக பாலகிருஷ்ணா பார்க்கப்பட்டு வருகிறார்.


கிட்டத்தட்ட 30 வயது வித்தியாசம் உள்ள இளம் பெண்ணுடன் பாலகிருஷ்ணாவுக்கு இப்படி ஒரு நடனம் இந்த வயதில் தேவையா? என பலரும் அவரை விமர்சித்தாலும் அவர் அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய ஸ்டைலில் தன்னுடைய பாணியில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.


அந்த நடனத்தை பலர் ட்ரோல் செய்தாலும் பாலகிருஷ்ணாவின் ரசிகர்கள் பலரும் அவரது நடனத்தை ரசித்து கமெண்ட் செய்து அந்த வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.எப்போதும் ஐட்டம் பாடல் கவர்ச்சி நடனம் உள்ளிட்டவற்றில் நடனமாடியும்  ஹீரோக்களுடன் எக்குத்தப்பாக கவர்ச்சி எக்ஸ்பிரஷன் கொடுத்து மிகவும் பிரபலமாகிவிட்ட ஊர்வசி இன்று இந்த அளவுக்கு உச்சத்தை தொட்டுவிட்டாரே என தென்னிந்திய சினிமா ரசிகர்களாலும் பேசப்பட்டு வருகிறார்.

Blogger இயக்குவது.