15 வருஷம்.... ரம்பா வீட்டில் நடந்த விஷேசம் - கொட்டி குவியும் வாழ்த்துக்கள்!

நடிகை ரம்பா:

தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை ரம்பா. பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமான நடிகையாக 90ஸ் காலகட்டத்திலேயே பார்க்கப்பட்டு வந்தார்.

1993 ஆம் ஆண்டு உழவன் என்கிற திரைப்படத்தில் நடித்ததத்தின் மூலமாக நடிகை ரம்பா அறிமுகம் ஆனார். அதையடுத்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், விஐபி, அருணாச்சலம், ஜானகி ராமன், காதலர் தினம், நினைத்தேன் வந்தாய், காதலாக, உனக்காக எல்லாம், மின்சார கண்ணா, சுயம்வரம், அன்புடன் சுதந்திரம், அழகான நாட்கள், அழகிய தீயே, சுக்கிரன் உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்கள் நடித்திருக்கிறார் .

திரைப்படங்கள்:

90 காலகட்டத்தில் நடிக்க ஆரம்பத்தில் நடிகை ரம்யா ரம்பா 2010 வரை தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வந்தார். இது தவிர அவர் தெலுங்கு திரைப்படத்திலும் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து அங்கும் பிரபலமான நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆந்திர பிரதேசம் சொந்த ஊராகக் கொண்ட நடிகை ரம்பா இலங்கையை சேர்ந்த இந்திரகுமார் பத்மநாதன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர் கனடாவில் வசித்து வந்தார்கள். 

இதனிடையே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில ஆண்டுகள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் மீண்டும் இருவரும் ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள்.

இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் என குடும்பத்தோடு தற்போது மகிழ்ச்சி ஆக வாழ்ந்து வருகிறார்கள். எனக்கு ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பல்வேறு தொழில்களை நடத்தி அதன் மூலம் கணிசமான வருமானத்தை சம்பாதித்து வருகிறார்.

15 வருஷ விஷேசம்: 

திருமணம் குழந்தை பிறப்புக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை விட்டு விலகி இருக்கும் நடிகை ரம்பா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். விஜய் டிவியில் டான்ஸ் ஒன்றில் பங்கேற்று வருகிறார்.





அத்துடன் odi Are U Ready Season 2 உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை ரம்பா தனது கணவருடன் நிச்சயதார்த்தமாகி 15 வருடங்கள் ஆவதை கொண்டாடி இருக்கிறார். 

தற்போது கணவருடன் இருக்கும் புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கிறார். அழகிய புகைப்படங்கள் இணைவாசிகளின் கவனத்தை ஈர்க்க அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Blogger இயக்குவது.