46 வயசும் ஆகியும் கல்யாணம் ஆகல - பதுமை அழகிக்கே இப்படி ஒரு நிலைமையா?
திரைப்படங்கள்:
அதை அடுத்து காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து பல வெற்றிகரமான தமிழ் படங்களில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளிவந்த நேருக்கு நேர், சொல்லாமலே , பிரியமுடன், ஜாலி, பூவேலி, ஏழையின் சிரிப்பில், தை பொறந்தாச்சு, ராஜகாளியம்மன், சந்தித்த வேலை, ஜேம்ஸ் பாண்ட் ,குபேரன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்கள் இவரது கெரியரில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது .
தாலி காத்த காளியம்மன் திரைப்படத்தில் கற்பகம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார் நடிகை கௌசல்யா. பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பல ரசிகர்களின் மனதை கவர்ந்த இவருக்கு காதல் தோல்வி என்று சொன்னால் நம்புவீர்களா?
ஆம் தற்போது 46 வயதாகும் கௌசல்யா காதல் தோல்வியால் இன்று வரை திருமணமே செய்யாமல் திருமணம் காதல் வாழ்க்கையை வெறுத்து ஒதுக்கி வாழ்ந்து வருகிறார். இது குறித்து சமீபத்திய -அவர் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
காதல் தோல்வி:
அதாவது சினிமாவில் நான் பிஸியாக இருந்தபோது நான் ஒரு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால் அது சில காரணங்களால் திருமணம் தில் முடியாமல் போய்விட்டது. இதனால் எனக்கு காதல் மீதும் திருமணத்தின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. அதனால் இப்போது வரை குடும்பம் குழந்தை என பெரிய பொறுப்பை என்னால் சிறப்பாக கையால முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை.
அதனால் நான் திருமணம் வேண்டாம் என ஒதுக்கி விட்டேன். இப்போது வரை நான் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு அது தான் மிக முக்கிய காரணம் என கௌசல்யா கூற ரசிகர்கள் அதிர்ச்சி ஆகிவிட்டனர். பார்ப்பதற்கு பப்ளி தோற்றத்துடன் நல்ல வசீகர குடும்பத்திற்கு ஏற்ற ஹோமியான முக ஜாடையுடன் எப்போதும் அமைதியான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தும் கௌசல்யாவுக்கு காதல் தோல்வியா என ரசிகர்கள் வேதனை அடைந்து விட்டனர்.