என் மகன் AR முருகதாஸின் Assistant.... என் கூட வச்சிக்க மாட்டேன் ஏன் தெரியுமா?
இயக்குனர் சங்கர்:
தமிழ் சினிமாவில் பிரமாண்ட படைப்பாளியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கும் இயக்குனர் சங்கர் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களை கொடுத்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இயக்குனராக இருந்து வருகிறார்.
இவர் திரைப்படங்கள் பிரம்மாண்டத்துக்கு பஞ்சம் இல்லாத வகையில் மிகப்பெரிய பொருட்களில் மிகப்பெரிய நட்சத்திர பிரபலங்கள் வைத்து எடுக்கப்படும். இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் வெளிவந்தாலே அது மாபெரும் வெற்றி திரைப்படங்களாக அமைந்துவிடும்.திரைப்படங்கள்:
1993 ஆம் ஆண்டில் ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆன ஷங்கர் தொடர்ந்து காதலன் இந்தியன் , ஜீன்ஸ், முதல்வன், பாஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன் ,நண்பன், ஐ, 2.0 உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக பெயர் எடுத்திருக்கிறார் .
இவரது திரைப்படங்களில் தொழில்நுட்பம் மிகவும் சிறப்பாகவும் பிரம்மாண்டம் மிக்கவையாகவும் இருக்கும் அதிரடியாக சமூக மாற்று கருத்துக்களை இவரது திரைப்படங்கள் பேசும். அதற்காகவே ரசிகர்கள் இவரது படத்தை விரும்பி பார்ப்பார்கள் .சங்கர் பேட்டி:
இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள் இதில் இளைய மகள் அதிதி சங்கர் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் இவரது மகன் பற்றிய தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது .ஆம் இயக்குனர் சங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய மகன் குறித்து பேசி உள்ளார்.அதாவது என்னுடைய மகன் ஏ ஆர் முருகதாஸிடம் இப்போது assistant ஆக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னிடம் அவரை வச்சிக்கவே மாட்டேன் .
முருகதாஸிடம் அசிஸ்டன்ட்:
ஏனென்றால் என்னிடம் அவர் வேலை பார்த்தால் அவரை வேலை கற்றுக் கற்றுக்க விடாமல் செல்லம் கொடுத்து உட்கார வச்சிருவாங்க. அதனால் வேறு ஒருவரிடம் வேலை கற்றுக்கொண்டு அதுக்கப்புறம் வந்து என்னிடம் வேலை செய்யலாம் என்று என் மகனை அனுப்பி வைத்தேன் என கூறி இருக்கிறார்.
இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் சங்கர் மகனே அசிஸ்டன்ட்டா வேலை செய்கிறாரா? என்னடா சொல்றீங்க? இப்படித்தான் பிள்ளையை வளர்க்க வேண்டும் என சங்கருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.