"Aunty"னு அழைத்த இளம் நடிகை... பட்டுன்னு ஒரு அடி போட்ட தமன்னா!
மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்த்து நடிகை தமன்னா கடந்த 2005 ஆம் ஆண்டு மூலம் முதல் நடிப்பு நடிப்பு வாழ்க்கை துவங்கி தொடர்ந்து நடித்து வருகிறார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்தி திரைப்படம் ஒன்றில் நடித்த இவர் அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார் .
பின்னர் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாக 2006 ஆம் ஆண்டு நடித்துஅறிமுகம் ஆகினார். அதன் பிறகு தமிழில் கல்லூரி திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பேமஸானார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை தேடி கொடுத்ததால் தமன்னாவின் மார்க்கெட்டும் உயர துவங்கியது.
கல்லூரி மாணவியாக மேக்கப் போடாமல் நேச்சுரல் அழகியாக நடித்த தமன்னாவை ஒட்டுமொத்த ரசிகர்களும் ரசித்து தள்ளினார்கள். பொருளாதார ரீதியாக நல்ல வசூலை ஈட்டி தந்ததால் இந்த திரைப்படம் அவருக்கு நல்ல அறிமுகம் நல்ல பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
திரைப்படங்கள்:
மேலும் தமிழில் முன்னணி நடிகையாக திகழ்வதற்கு ஒரு காரணமாகவும் அது அமைந்தது. அதை அடுத்து கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் , அயன், பையா, சிறுத்தை, வீரம், தர்மதுரை, தேவி, ஸ்கெட்ச், அரண்மனை 4 உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் அடுத்து அடுத்து நடித்துள்ளார்.தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த இவர் பாலிவுட் சினிமாவில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இதனிடையே ஜீ கர்தா மற்றும் தி லஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட வெப் தொடர்களில் நடித்ததன் மூலமாக சர்ச்சைக்குரிய நடிகையாக மாறினார்.
காதல்:
இந்நிலையில் தற்போது 35 வயதாகும் நடிகை தமன்னா பாலிவுட் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். பல ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து டேட்டிங் செய்து வந்த இவர் பின்னர் பொதுவெளியில் காதலை அறிவித்தார்.இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கிறார்கள். இப்படியான சமயத்தில் நடிகை தமன்னாவை பிரபல பாலிவுட் இளம் நடிகை ஒருவர் ஆன்ட்டி என அழைத்த விஷயம் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.ஆன்டி....:
அதாவது பாலிவுட் நடிகை ராஷா ததானி நடிகை தமன்னாவை ஆன்ட்டி என அழைத்ததை கேட்டவுடனே தமன்னா ஒரு நிமிடம் ஷாக்காகி சிரித்து விட்டார். அதன் பிறகு பட்டென்று ஒரு அடி போடு போட்டு ஆன்டி-ஆ?என கேட்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வைரலாகி வருகிறது.
இதை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் 15 வயதில் சினிமாவில் நடிக்க வந்த தமன்னாவுக்கு தற்போது 35 வயதாகிறது. 19 வயதான இளம் நடிகை ராஷா ததானி அவரை சிறுவயதில் இருந்தே பார்த்து வருவதால் ஆன்டி என அழைத்ததில் எந்த ஒரு தவறும் இல்லை எனக்கூறி தமன்னா உண்மையிலேயே ஆன்டி தான் என தெரிவித்து வருகிறார்கள். முன்னதாகவே தமன்னா பாட்டியா என்ற பெயரை தமன்னா பாட்டி என அழைத்து கிண்டல் செய்வது வருவது குறிப்பிடுத்தக்கது.