புது தாலி மாற்றுவதற்குள் பூகம்பம் - நடிகை மீது தீராத சந்தேகம் - விரைவில் விவாகரத்தா?
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருந்து வருபவர் தான் அந்த நடிகை. பார்ப்பதற்கு லட்சணமான முகத்துடன் மங்களகரமான தோற்றத்துடன் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
அவரின் அம்மா ஏற்கனவே திரைத்துறையில் இருப்பவர் தான். ஆனால் அப்பா அவரை நடிக்க சம்மதிக்கவே இல்லை. இருந்தாலும் விடாப்பிடியாக தீராத பிடிவாதத்தால் இருந்து வந்த மகளை ஒரு வழியாக சம்மதித்திருக்கிறார் அவரது அப்பா .
குறுகிய காலத்தில் பிரபலம்:
அதன் பிறகு சினிமாவில் நடிக்க வந்தார். முதலில் நல்ல நல்ல வாய்ப்புகளை இழந்த அந்த லட்சணமான நடிகை அதன் பிறகு பட வாய்ப்புகளை தவறவிடாமல் மிகச் சரியான முறையில் தேர்ந்தெடுத்து நடித்து குறுகிய காலத்திலேயே நட்சத்திர நடிகைக என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த அந்த பிரபலமான நடிகைக்கு பாலிவுட்டில் இருந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் பிட் தோற்றத்திற்கு மாறியதுடன் படு கவர்ச்சியான ரோல்களிலும் தயங்காமல் நடிக்க ஆரம்பித்தார்.
பாலிவுட் நடிகருடன் நெருக்கம்:
அப்படித்தான் கிளாமராக நடிக்க துவங்கினார். அந்த வகையில் சமீபத்தில் அவரது நடிப்பில் அண்மையில் வெளிவந்த பாலிவுட் படத்தில் அந்த படத்தின் ஹீரோவுடன் படு நெருக்கமாக மோசமான ரொமான்டிக் காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார் .
இதனால் இவர்கள் இருவரும் தொடர்ந்து திரைத்துறை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்கள். திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டபோது கூட இருவரும் நெருக்கமாக கட்டியணைத்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளாகியது .
விரைவில் விவாகரத்து:
அம்மணிக்கு வேறு அண்மையில் தான் திருமண நடைபெற்றது. இந்த படத்தை பார்த்து அவரது கணவரும் பிபியின் உச்சத்திற்கே சென்று விட்டாராம். ஒரு வேலை வெளிவந்த கிசு கிசு செய்திகள் எல்லாம் உண்மையாகத்தான் இருக்குமோ என்ற நினைந்து சந்தேகப்படத்துவங்கி விட்டாராம்.
இதனால் இவரை இனிமேல் நடிக்க விடலாமா? வேண்டாமா?என்ற குழப்பத்தில் அவரது கணவர் இருந்து இருக்கிறாராம். இது இப்படியே போனால் அவரது கணவர் நிச்சயம் திரைப்படத்துறையில் நடிகையை விடமாட்டார் என சினிமாக்காரர்கள் கூறுகிறார்கள். ஒரு ஒருவேளை அவர் நடிக்க போகிறேன் என அடம் பிடித்தால் அடுத்த விவாகரத்து இவர்களாக தான் இருக்கும் என்கிறது ஒரு கூட்டம்.