கொஞ்சம் பிசிறு தட்டுச்சுனா அவ்ளோவ் தான் - ஆபத்தான ஆட்டம் போட்ட ஷிவாங்கி!
இசை பின்னணி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சிவாங்கி கிருஷ்ணகுமார் பின்னணி பாடகியாக இருந்து வருகிறார். 2K கிட்ஸ் ஆன இவர் கடந்த 2000 ஆம் ஆண்டு பிறந்தவர். பாடகி மற்றும் நகைச்சுவை நடிகையாக தற்போது சினிமா துறையில் சிறந்து விளங்கி வருகிறார் .
இவர் சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார். அந்த நிகழ்ச்சியில் சிவாங்கியின் குரலைக் கேட்டு ஒட்டுமொத்த ரசிகர்களும் மெய்மறந்து போனார்கள்.
குயில் போன்ற குரல்:
குறிப்பாக ஷிவாங்கி பேசும்போது ஒரு குரலும் பாடும்போது இனிமையான குயில் போன்ற குரலும் இருப்பதே ரசிகர்களை பிரமித்து பார்க்கச் செய்தது. அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அதில் காமெடி கலாட்டா செய்து அனைவரது கவனத்தை ஈர்த்தார்.
நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சியான இதில் சிவாங்கியின் பெர்பாமன்ஸ் அனைவரது கவனத்தை ஈர்த்தது. அதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கூடவே திரைப்படங்களுக்கு பாடல்களையும் பாடி வருகிறார்.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படத்தில் சிவாங்கி துணை நடிகையாக நடித்து அசத்தியிருந்தார். மேலும் சிவாங்கி அதே திரைப்படத்தில் ஒரு பாடலையும் பாடியிருந்தார். மேலும் அஸ்குமாரோ என்ற பாடல் பாடியுள்ளார்.
அந்த பாட்டு மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்ததை அடுத்து தெலுங்கிலும் பாடினார் சிவாங்கி. மேலும் முருங்கைக்காய் சிப்ஸ், டாக் லெஸ் ஒர்க் மோர் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் பாடல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இப்படி பிஸியாக நடித்துக் கொண்டே பாடல்களை பாடிவரும் சிவாங்கி எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். சமூக வலர்தலங்களில் தனது அழகழகான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.கடந்து சில நாட்களாக சிவாங்கி மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோ சூட் வெளியிடுவதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில் தற்போது ஷிவாங்கி மொட்டை மாடியில் சென்று அசத்தலாக நடனமாடிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.
இதனை பார்த்த ஷிவாங்கியின் ரசிகர்கள் பார்த்து... பார்த்து.... பத்திரமா ஆடுங்க கொஞ்சம் பிசிறு தட்டினால் கூட அவ்வளவுதான் போல. ஆபத்தான முறையில் எதற்கு இப்படி ஆட்டம் போடணும்? என சிலர் ஷிவாங்கிக்கு அறிவுரை கூறியும் வாழ்த்துகளையும் தெரிவித்தும் வருகிறார்கள். இந்த வீடியோ தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகிறது .
https://www.instagram.com/reel/DE7UXcpv4h2/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==