ஓவர் குடி... வேட்டி அவிழ்த்து நிர்வாணமா நின்ற வில்லன் நடிகர் - வைரலாகும் வீடியோ!
நடிகர் விநாயகம்:
பிரபலமான வில்லன் நடிகர் ஆன விநாயகம் மலையாள சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அங்கு பிரபலமான வில்லன் நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். இருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.
அந்த அளவுக்கு வில்லன் ரோல்களில் வெளுத்து வாங்குவார் மிரட்டி எடுப்பார். இவர் தமிழில் கூட சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானவராக இருந்தார். இவரது அட்டகாசமான நடிப்பிற்கு சிறந்த நடிகருக்கான கேரளா அரசு வழங்கி கௌரவித்தது.
குடி போதையில் கூத்து:
அது மட்டும் இல்லாமல் பெண்கள் விஷயத்தில் மிகவும் வீக் என்றே சொல்லலாம் தன்னுடன் நடிக்கும் நடிகைகளை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக கூட செய்திகள் வெளியாகி சில மாதங்களுக்கு முன்னர் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்திருக்கிறது. அதாவது இவர் போதையில் செய்யும் அலப்பறைகளுக்கு அளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஓவர் குடிபோதையில் பால்கனியில் நின்றபடி தன்னுடைய வேட்டியை அவிழ்த்து நிர்வாணமாக நின்று கொண்டிருக்கும் விநாயகரின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
இது மலையாள சினிமாவில் பெரும் சர்ச்சை கூறியதாக பார்க்கப்பட்டு வருகிறது. திரைப்படங்களில் நடிக்கும் போது தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்கும் விநாயகம் தனிப்பட்ட வாழ்க்கையில் சமூக சமூகப் பொறுப்புகள் அற்ற நபராகவே பார்க்கப்படுகிறார் .
இந்த சம்பவத்தால் அவர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இப்படி எங்கு சென்றாலும் இதே போல் போதையில் ஏதாவது பிரச்சனையை இழுத்து விடுவதே வேலையாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது நடிகர் விநாயகம் தனது வீட்டின் பால்கனியில் இருந்து கொண்டு அக்கம் பக்கத்து வீட்டாருடன் வாக்குவாதத்து ஈடுபடுகிறார்.
தொடரும் தொல்லைகள்:
அப்போது போதையில் இருந்த அவர் தொடர்ந்து ஆபாசமாக பேசியதோடு தன்னுடைய வேட்டி அவிழ்த்து காட்டுகிறேன் என்று நிர்வாணமாகவும் நின்றிருக்கிறார். அதனால் கீழே விழுந்த அவரின் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
இதனால் அக்கம் பக்கத்து குடியிருப்பு வாசிகளும் விநாயகத்தால் பெரும் தொல்லை அனுபவித்து வருவது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் மலையாள சினிமாவுலகில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. விநாயகம் தொடர்ந்து இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுவதால் அவரை தொடர்ந்து படங்களில் நடிக்க வைக்க கமிட் செய்வதற்கு படத்தின் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் யோசிக்கிறார்கள்.
நடிகர் விநாயகம் தமிழில் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக நடித்துஅட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.