பணத்தை விட காதல் தான் பெரியது.... வியப்பூட்டும் தமன்னாவின் செயல்!

நடிகை தமன்னா: 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையாக இருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் பம்பாய் பகுதியை சேர்ந்த நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் நடிக்க வந்தது முதல்  முதலில் 2006 இல் வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் தான் நடித்து வந்தார். அதன் பிறகு கல்லூரி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார்.

திரைப்படங்கள்:

அவரது நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது. இதனால் அவர் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். கல்லூரி மாணவியாக தமன்னா அந்த திரைப்படத்தில் நடித்திருந்தது விமர்சன ரீதியாக மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது.

இந்த வெற்றியை அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்வதற்கு காரணமாகவும் அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகளும் அவருக்கு தேடி கொடுத்தது பாகுபலி, தர்மதுரை, சிறுத்தை, வீரம், தேவி, ஸ்கெட்ச், ஜெயிலர், அரண்மனை, அயன், பையா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதனுடையே லஸ்ட் ஸ்டோரீஸ், ஜீ கர்தா உள்ளிட்ட வெப் சீரிஸ்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் முகம் சுளிக்க வைத்தார். பாலியல் ரீதியான தொடரில் நடித்த தமன்னாவை பலரும் விமர்சித்தாலும் அது தொடர்வதற்கு பெரிய அடையாளத்தை கொடுத்தது. 

காதல்: 

இந்த வெப் சீரியஸில் அவருடன் நடித்த நடிகர் தான் விஜய் வர்மா. விஜய் வர்மாவை பல ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த நடிகை தமன்னா அதன் பின்னர் தங்களது காதலை பொதுவெளியில் அறிவித்தார்.

விரைவில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கிறார்கள். இந்த நிலையில் பணத்தை காட்டிலும் காதல் தான் பெரியது என செய்திருக்கும் ஒரு விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. 

பணம் முக்கியம் இல்லை: 


அந்த பேட்டியில் தமன்னாவின் காதலர் ஆன விஜய் வர்மா தொடரில் நடிக்க அதிகபட்சம்ரூ. 85 லட்சம் சம்பளமாக வாங்குகிறார். ஆனால் தமன்னா ஒரு பாடலுக்கு நடனம் ஆடவே ஒரு கோடி ரூபாயை சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.



இப்படி தன்னுடைய காதலன் தன்னைவிட குறைவான சம்பளம் பெற்று இருந்தாலும் பணம் தனக்கு முக்கியமில்லை. பணத்தைவிட காதல் தான் எனக்கு பெரியது என தமன்னா விஜய் வர்மாவை தேர்வு செய்த விதம் ரசிகர்களை கவர்ந்திருப்பதாக பலரும் பாராட்டுகளையும் கருத்துகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

Blogger இயக்குவது.