ஐயோ...! உனக்கு இதெல்லாம் தேவையா? அட்லீயை பங்கமா கலாய்த்த சமந்தா!
நடிகை சமந்தா:
தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனராக இருந்து வருபவர் தான் அட்லீ. இவர் இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி நண்பன், எந்திரன் ஆகிய இரண்டு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து படம் எடுக்கும் நேக்குகளை கற்றுக் கொடுத்துக்கொண்டார்.
அதன் பிறகு ஆர்யாவை வைத்து ராஜா ராணி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். இந்த திரைப்படம் அவருக்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைத் தேடிக் கொடுத்தது.
அட்லீயின் திரைப்படங்கள்:
முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்த அட்லீக்கு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.
இவர் ராஜா ராணி படத்தை இயக்குவதற்கு முன்னதாகவே நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து முகப்புத்தகம் என்னும் குறும்படத்தை இயக்கியிருந்தார்.
அந்த குறும்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் பிரியா அட்லீ. காதலித்து அட்லீயை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களை இயக்குவதில் அதிக ஆர்வத்தையும் கவனத்தையும் செலுத்தியுள்ளார்.
இவர் விஜய்யை வைத்து தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். குறிப்பாக தெறி, பிகில், மெர்சல் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்கள் அவருக்கு பெரும் அடையாளத்தையும் பெயரையும் புகையும் தேடி கொடுத்தது.
கலாய்த்த சமந்தா:
தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக நட்சத்திர அந்தஸ்தை பிடித்த அட்லீக்கு பாலிவுட் சினிமாவில் படம் இழக்கும் வாய்ப்பு தேடிச்சென்றது. அங்கு பாலிவுட் சினிமாவில் ஸ்டார் நடிகராக இருந்து வரும் ஷாருக்கானை வைத்து படம் எடுக்க அட்லீ முன் வந்தார் .
ஜவான் என்ற தலைப்பில் அந்த திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படம் பல கோடி வசூலை ஈட்டி கொடுத்தது. அவர் அதை போல் அதேபோல் இயக்குனர் அட்லீயும் பெங்களூர் அணி விலைக்கு வாங்கி இருக்கிறார்.
இந்த நிலையில் இது தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இருவரும் சந்தித்துக் கொண்ட போது அட்லீயின் குழந்தையை சமந்தா கொஞ்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. அட்லீயுடன் பேசிய சமந்தா இந்த ஸ்ட்ரெஸ் உனக்கு தேவையா? என கலாய்த்து பங்கமாக சிரிக்கிறார் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆகி வருகிறது.