கல்யாணம் மட்டும் பண்ணமாட்டேன்.... மத்தபடி எல்லாம் ஓகே - ஸ்ருதி ஹாசனுக்கு இத்தனை கோடியா?

ஸ்ருதி ஹாசன்:

தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகைகளில் ஒருவரான ஸ்ருதிஹாசன் வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்தவர். கமலஹாசனின் மூத்த மகள் என்ற மிகப்பெரிய அடையாளத்தோடு சினிமா துறைக்கு வந்ததால் மிக குறுகிய காலத்திலேயே பேமஸ் ஆகிவிட்டார். 

திரைப்படங்களில் நடித்து ஹீரோயின் ஆக அறிமுகமாவதற்கு முன்னரே இவர் குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களிலும் குழந்தையாக பல படங்களுக்கு பாடல்களும் பாடியிருக்கிறார். குறிப்பாக 1992 ஆம் ஆண்டு தேவர்மகன் திரைப்படத்தில் போற்றி பாடடி பெண்ணே திரைப்படத்தை திரைப்பட பாடலை பாடியவர் இவர்தான். 

திரைத்துறை அனுபவங்கள்: 

தொடர்ந்து ஹேராம் மற்றும் என் மன வானில் உள்ளிட்ட சில படங்களுக்கு அவர் பாடல் பாடியிருக்கிறார். அத்துடன் வாரணமாயிரம் திரைப்படத்தில் அடியை கொல்லுதே அழகே என்ற திரைப்பட பாடலை பாடியிருந்தார் .

மேலும் உன்னை போல் ஒருவன் உள்ளிட்ட சில திரைப்பட பாடல் பாடி வந்த இவர் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். அதே திரைப்படத்திற்கு சில பாடல்களையும் அவர் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை அடுத்து தனுஷ் உடன் மூன்று மற்றும் பூஜை, புலி , வேதாளம், சிங்கம் 3 இப்படி நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து பிரபலமான நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது மும்பையில் வசித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் திரைப்பட சூட்டிங் ஏதேனும் இருந்தால் மட்டும் சென்னைக்கு வந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். 

அவர் தன்னுடைய அப்பா கமல்ஹாசன் என்ற மிகப்பெரிய பிம்பம் இருந்தாலும் அவரது வருமானத்தையும் அவரது புகழையும் பெயரையும் தான் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. தான் தனித்துவமாக தெரிய வேண்டும் என்பதற்காக தான் சுருதிஹாசன் தொடர்ந்து தன்னுடைய தனித் திறமையை வெளிப்படுத்தி நடித்து வருவதாக பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.

20 வயதிலேயே என்னுடைய அப்பாவின் வருமானத்தை வாங்குவதை நான் விட்டுவிட்டேன். நான் சொந்தமாக சம்பாதித்து தான் என்னுடைய செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறியிருந்தார். இதனுடைய சுருதி ஹாசன் சில காதல் தோல்விகளையும் சந்தித்து இருந்தார்.

சொத்து: 

இந்த நிலையில் தற்போது 38 வயதாகும் நடிகை ஸ்ருதிஹாசன் இதுவரை திருமணம் ஏ செய்யாமல் இருக்கிறார். ஆனால் அவர் அவ்வப்போது லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்க்கையின் இன்பமாக வாழ்ந்து வருகிறார். 


இந்த நிலையில் சுருதிஹாசன் சொத்து மதிப்பு குறித்த விவரம் இணையத்தில் வெளியாகி எல்லோரையும் வியக்க வைத்திருக்கிறது. அதாவது ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி சம்பளம் வாங்கும் ஸ்ருதி ஹாசன் ரூ 40 முதல் ரூ. 45 கோடி வரை சொத்து வைத்திருக்கிறார் என கூறப்படுகிறது.

Blogger இயக்குவது.