ரக ரகமா இருக்கு.... புது புது கெட்டப்பில் மாஸ் காட்டும் ஸ்ருதி ஹாசன்!

ஸ்ருதி ஹாசன்: 

தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திர நடிகை அந்தஸ்தில் இருப்பவர் தான் நடிகை சுருதிஹாசன். இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து பிரபலமான நடிகை என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் .


தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். மேலும் பாடல்களையும் பாடி இருக்கிறார். இவர் ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமாகி  இருந்தார்.

திரைப்படங்கள்: 

அதுதான் இவரது முதல் திரைப்படம். அதை எடுத்து அஜித், தனுஷ், விஜய், சூர்யா உள்ளிட்ட நட்சத்திர ஹீரோக்களோடு ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலமாக பிரபலமான நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.


கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்தோடு திரைத்துறையில் ஜொலித்துக் கொண்டிருந்தாலும் தனக்கென தனி அடையாளத்தையும் பிரபலத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.

ரக ரகமா ஸ்ருதி ஹாசன்: 

இதனிடையே எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவரது அவர் விதவிதமான கெட்டப்பில் எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை வீடியோவாக இணையத்தில் வெளியிட அது அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 


அது வித்தியாசமாகவும் இருக்கிறது. அவருக்கு அது அனைத்துமே பக்காவாக பொருந்துவதாக ரசிகர்கள் பலர் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இதோஅந்த வீடியோ:  







Blogger இயக்குவது.