எங்கள் வீட்டு வாரிசு.... தாத்தாவான மகிழ்ச்சியில் ரோபோ ஷங்கர்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் ரோபோ சங்கர். விஜய் தொலைக்காட்சியில் தன்னுடைய வாழ்க்கை பயணத்தை துவக்கிய இவர் சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்றும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
முதன் முதலில் தீபாவளி திரைப்படத்தில் பெரிதாக பிரபலப்படுத்தாத வகையில் ஒரு கேரக்டரில் நடித்த ரோபோ சங்கர் தொடர்ந்து ரௌத்திரம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, யாருடா மகேஷ், வாய மூடி பேசவும், புலி, சாகசம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான காமெடி நடிகராக அறியப்படுகிறார்.
இந்திரஜா:
இவர் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக மிகப் பெரிய அளவில் பிரபலமானதுடன் திரைப்பட வாய்ப்புகளையும் பெற்றார். இவர் பிரியங்கா சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.அவருக்கு இந்திரஜா சங்கர் என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்திராஜா விஜய்யின் பிகில் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். பிகில் திரைப்படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் குழுவில் இந்திரஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் .
அந்த கேரக்டர் அவரை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தியது என்று சொல்லலாம். "குண்டம்மா" என்ற கேரக்டரில் நடித்த இந்திரஜா அந்த கதாபாத்திரத்தின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதனிடையே சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இந்திரஜா. அவருக்கு தனி ரசிகர்களும் இருக்கிறார்கள். தொடர்ந்து அதிதி சங்கர் நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்திலும் அவரின் தோழியாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இந்திராஜா தன்னுடைய மாமாவான கார்த்திக் என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த இந்திரஜாவுக்கு அவரது வீட்டார் சார்பில் சீமந்த விழா நடத்தி அழகு பார்த்தார்கள்.
அவ்வப்போது இந்திரஜா தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களையும் அதன் அனுபவங்களையும் வீடியோவாகவும் புகைப்படங்கள் ஆகவும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து இந்திரஜா வெளியிட்டு வந்தார். இப்படியான நேரத்தில் நேற்று இந்திரஜாவுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது குடும்பத்தார் மற்றும் இந்திராஜாவே சமூக வலைதளங்களில் அறிவித்திருக்கிறார்.
இதை அடுத்து ரோபோ சங்கரின் வீட்டில் முதல் வாரிசு என கூறி ரசிகர்கள் அந்த புகைப்படங்களை வைரல் ஆக்கி வருகிறார்கள். தாத்தாவான சந்தோஷத்தில் ரோபோ ஷங்கர் இருப்பதாக அவருக்கு பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.