நூல் நூலா தொங்குது.... கவர்ச்சி உடையில் கச்சேரி - ஆசை தூண்டும் ஆண்ட்ரியாவின் நடனம்!

நடிகை ஆண்ட்ரியா: 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையும் பாடகியமாக இருந்து வருபவர் தான் ஆண்ட்ரியா. இவர் திரைப்பட பின்னணி பாடகியாகவும் திரைப்படங்களில் ஹீரோயின்களுக்கு குரல் கொடுப்பவருமாக இருந்து வருகிறார். இதனிடையே பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாகவும் இவர் அறியப்படுகிறார் .


ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் பாடகியாக இருந்து வந்தவர் பிறகு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.

பாடகி To கதாநாயகி: 

சென்னையில் உள்ள அரக்கோணத்தை சொந்த ஊராகக் கொண்ட இவர் ஆங்கிலோ இந்திய குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து இருக்கிறார்.

இவரது தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய 10 வயது முதலே பாடல் பாடிவரும் ஆண்ட்ரியா கல்லூரி நாடகத்திலும் நடித்திருக்கிறார். 

திரைப்படங்களில் பாடல் பாடுவதே தன்னுடைய தொழிலாக வைத்திருந்த ஆண்ட்ரியா கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடல் பாடினார்.


பிறகு அவருடைய அடுத்த படமான பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படத்தில் சரத்குமார் உடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அதில் நடிகையாக அறிமுகமாகி இருந்தார். 

தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி, துப்பறிவாளன், விஸ்வரூபம் 2, வடசென்னை, மாஸ்டர், அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.


இதனிடையே அவர் பாடல் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். கச்சேரிகளுக்கு சென்று அங்கு பாடல் பாடுவதன் மூலம் அவர் லட்சக்கணக்கில் வருமானமும் சம்பாதித்து வருகிறார். 

அந்த வகையில் தற்போது பாடல் கச்சேரி ஒன்றில் ஆண்ட்ரியா கவர்ச்சியான ஆடை அணிந்து மேடையில் பாடல் பாடிக் கொண்டே நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் ஆண்ட்ரியாவின் ஆடை படு கவர்ச்சியாக அங்கங்க நூல் நூலாக தொங்கியபடி இருக்கிறது. அதில் அவரின் நடனம் இன்னும் கவர்ச்சியை தூக்கலாக காட்டுகிறது. இந்த வீடியோ ரசிகர்களின் ஏடாகூடமான ரசனைக்கு உள்ளாகி அவரை எக்குத்தப்பாக ரசிக்க வைத்திருக்கிறது ஏதோ அந்த வீடியோ

https://www.instagram.com/p/DFR2sPUydQH/?utm_source=ig_web_copy_link

Blogger இயக்குவது.