தகாத பழக்கம்... போதைக்கு அடிமை ஆகிட்டேனா? எச்சரித்த விஷால்!





நடிகர் விஷால்: 


தமிழ் சினிமாவில் பிரபல ஹீரோவான விஷால் அதிரடியான ஆக்சன் திரைப்படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர். மாநிற தோற்றம் கொண்டிருந்தாலும் நல்ல உயரம் கட்டுமஸ்தான உடல் தோற்றம் வசீகர பார்வை உள்ளிட்டவற்றால் விஷால் பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.


இவரது தந்தை தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஷால் நடிகர் ஆவதற்கு முன்னர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். தமிழ் தெலுங்கில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கும் விஷாலின் நடிப்பில் தமிழில் வெளிவந்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் மாபெரும் வெற்றித் திரைப்படங்களாக பார்க்கப்படுகிறது.


விஷாலின் திரைப்படங்கள்: 

மேலும் தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்தியம், தோரணை, தீராத விளையாட்டு பிள்ளை, அவன் இவன், பாண்டியநாடு ,நான் சிகப்பு மனிதன், ஆம்பள , சண்டக்கோழி 2, துப்பறிவாளன் ,இரும்புத்திரை உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு படம் வெளியாகாமல் நின்று போன திரைப்படம் தான் மதகஜராஜா. இந்த திரைப்படத்தில் விஷாலுடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தார்கள். பல வருடங்கள் கழித்து இந்த திரைப்படம் ரிலீசுக்கு தயாராக அண்மையில் தான் திரையரங்குகளில் வெளிவந்து சட்டை போடு போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷாலின் நடுங்கியது அவரது பேசும்போது அவரது உடல் எல்லாம் நடுக்கம் கொடுக்கவே விஷால் போதைக்கு அடிமையானதால் தான் இப்படி அவருக்கு நரம்பு தளர்ச்சி ஆகிவிட்டது. மேலும் அவர் தகாத பழக்க வழக்கங்களுக்கு போய்விட்டார். அதனால் தான் அவர் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் என்றெல்லாம் பத்திரிகையாளர்கள் தங்களது இஷ்டத்திற்கும் செய்திகளை பரப்பி விட்டார்கள்.

நரம்பு தளர்ச்சி: 

இதனால் இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. குறிப்பாக கை நடுக்கத்துடன் விஷால் பேசிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகிவிட்டது. ஆனால் அன்றைய தினம் விஷால் கடுமையான காய்ச்சலில் இருந்ததால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அப்போதே தொகுப்பாளர் டிடி  தெரிவித்து இருந்தார் .

இந்த நிலையில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் சங்கத்தில் இருக்கும் அவரது உருவப் திரைப்படத்திற்கு மரியாதை செலுத்திய விஷால் செய்தியாளர்களிடம் பேசும்போது இது குறித்து விளக்கம் அளித்தார்.

அதாவது... நான் செய்யும் சமூக சேவைக்கும் எம்.ஜி.ஆர் ஒரு காரணம். மதகஜராஜா திரைப்படம் சக்கை போடு போடுகிறது. எல்லோருக்கும் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அந்த பிரச்சனை எல்லாம் மறுக்கும் படியாக ஒரு திரைப்படம் எனக்கு அமைந்திருக்கிறது. அதுதான் மதகஜராஜா.

எனது உடல் நிலைக்கு ஒன்றுமே இல்லை. அன்றைய தினம் எனக்கு காய்ச்சல் அடித்தது. ஆனால் 12 வருடங்கள் கழித்து மிகவும் எதிர்பார்த்த திரைப்படமான மதகஜராஜா ரிலீஸ் ஆகியதால் இந்த படத்துக்காக நானும் சுந்தர்சியும் ஏங்கி காத்துக் கொண்டிருந்தோம்.

போதைக்கு அடிமை? 

அதனால் தான் நான் காய்ச்சலோடு கூட ப்ரோமோஷனில் கலந்து கொண்டேன். ஆனால் காய்ச்சலால் என்னுடைய உடல்நிலை அப்படி இருந்ததை வேறு மாதிரி கோணத்தில் திருப்பி விட்டார்கள். மற்றபடி எனக்கு நரம்பு தளர்ச்சியோ போதைப் பழக்கத்திற்கும் நான் அடிமையாகவில்லை. என்னை பற்றி வரும் செய்திகள் எல்லாம் வெறும் பொய்யான செய்திகள்.

இருந்தாலும் நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். எனது கைகள் நடுங்கிய வீடியோ பயங்கரமாக ட்ரெண்டாகியதால் பலபேர் எனக்கு போன் செய்து என் உடல்நலம் குறித்து விசாரித்தார்கள். அப்போதுதான் என் மீது எத்தனை பேர் அக்கறையாக இருக்கிறார்கள் என்பதே எனக்கு தெரியவந்தது. அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. என அந்த பேட்டியில் கூறி தன்னை பற்றிய வதந்திகளுக்கு இதன் மூலம் பகிரங்கமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Blogger இயக்குவது.