தீராத பசி.... பாலியல் இச்சைக்கு இரையான காம கண்ணழகி - சோகக்கதை!


சில்க் ஸ்மிதா: 

காந்த கண்ணழகி காம கவர்ச்சி நடிகை ஆக ஒரு காலகட்டத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் வசீகரித்து இழுத்தவர் தான் சில்க் ஸ்மிதா. இவர் தமிழ் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையே தன் வசீகர அழகால் கட்டிப்போட்டு வைத்திருந்தார்.

70களில் நடிக்க ஆரம்பத்தை இவர் 80களில் கொடி கட்டி பறந்த நடிகையாக பார்க்கப்பட்டார். மிகக் குறுகிய காலத்திலேயே புகழும் உச்சத்திற்கு சென்ற சில்க் ஸ்மிதா முதன் முதலில் வினு சக்கரவர்த்தியால் வண்டிச்சக்கரம் என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்ற சாராயம் விற்கும்  பெண் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகப்படுத்தப்பட்டார். 

வாட்டி வதைத்த வறுமை: 

அதன் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்து விட்டது. அதாவது சில்க் ஸ்மிதா என்றும் அதையே மக்களும் அடையாளம் கண்டனர். இவரது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் கிட்டத்தட்ட 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகையாக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். 

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஆந்திராவில் தான். ஆனால், இவரது பூர்வீகம் தமிழ்நாட்டை சேர்ந்த கரூர் என்பது குறிப்பிடத்தக்கது. வறுமை காரணமாக பள்ளி படிப்பை நான்காம் வகுப்பிலே நிறுத்திக் கொண்ட சில்க் ஸ்மிதா வசீகரத் தோற்றத்தின் காரணமாக பலரது தொல்லைகளுக்கு ஆளாகினார்.

காம இச்சைக்கு இரையான சில்க்: 

இதனால் இவரது குடும்பத்தார் இவருக்கு சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தனர். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக இவர் சென்னைக்கு படிப்பு தேடியும் புது வாழ்க்கை தேடியும் ஓடி வந்து இங்கு ஒரு உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.

தொடர்ந்து பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த சில்க் ஸ்மிதாவின் வசீகர அழகில் மிகப்பெரிய நட்சத்திரங்களே மயங்கி கிடந்தார்கள். இதற்காக அவர் வறுமையின் காரணமாக நடிக்க வந்த புதிதில் பட வாய்ப்புகளுக்காக பல நட்சத்திர பிரபலங்கள் அவரை தவறான முறையில் அணுகியதால் வேறு வழி இன்றி அவர்களின் இச்சைக்கு இறையாகினார்.

தற்கொலை: 

சில்க் ஸ்மிதா பல்வேறு திரைப்படங்களில் நடித்து மிகப்பெரிய உச்சத்திற்கு சென்ற பிறகு சில்க் ஸ்மிதாவை யாரும் நெருங்க கூட முடியாத அளவுக்கு அவர் உச்சத்தை தொட்டு விட்டார். இப்படி புகழும் உச்சத்திற்கு சென்ற சில்க் ஸ்மிதாவை யாராலும் ஆட்டி அசைக்கவே முடியாது என ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருந்த சமயத்தில் தான் 1996 ஆம் ஆண்டு சென்னையில் அவருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.


அப்போது சில்க் ஸ்மிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிகழ்விற்கு முன்பு இவர் திரைப்பட தயாரிப்பாளராக முயற்சித்து வந்ததாகவும் அதில் ஏற்பட்ட கடனாலும் மேலும் காதல் தோல்வியினாலும் ஏற்பட்ட குடிப்பழக்கத்தினாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளி வந்தது குறிப்பிடத்தக்கது.

Blogger இயக்குவது.