மழமழன்னு மயக்குறியேம்மா... சிகப்பு கிளாமர் சொக்கி இழுக்குது!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்படுவது தான் நடிகை ரெஜினா கேசன்ட்ரா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவராக பார்க்கப்படுகிறார் .
பல மொழி திரைப்படங்களில் நடித்தவரும் ரெஜினா சென்னை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் முதன் முதலில் ஐந்தாம் ஆண்டு வெளிவந்த கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தில் நடித்தது மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமாகி இருந்தார்.திரை வாழ்க்கை:
அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு சிவா மனசுல சுருதி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததற்காக 2012 ஆம் ஆண்டிற்கான சைமா விருது பெற்று கௌரவிக்கப்பட்டார்.
சென்னை சேர்ந்த ரெஜினா பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் இளங்கலை பட்டம் படித்துவிட்டு பிறகு தனக்கு சினிமா துறையில் இருந்து அதிக ஆர்வத்தால் திரைத்துறைக்கு வந்தார் .திரைப்பட நடிகை ஆவதற்கு முன்னதாக தொலைக்காட்சி தொகுப்பாளராக தன்னுடைய 9 வயதாக இருக்கும்போதே பணியாற்றி வந்தார். மேலும் சில குறும்படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். முதன் முதலில் பாலாஜி மோகனின் இயக்கத்தில் வெளிவந்த காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
திரைப்படம்:
அதன் பிறகு 2012 ஆம் ஆண்டு அதே பெயரில் முழுநீள படமாக உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த கண்ட நாள் முதல் திரைப்படத்தில் லைலாவின் தங்கையான லதா கேரக்டரில் ரெஜினா நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது .அதன் பிறகு கன்னடம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கவனத்தை செலுத்தி நடித்து வந்தார். அழகிய அசுரா, பஞ்சாமிர்தம், சிவா மனசுல சக்தி,கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா தந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும், சுருளிராஜனும், சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமௌலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இது தவிர அவர் பல்வேறு தெலுங்கு மொழி திரைப்படங்களும் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக காத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் அவர் அவ்வப்போது தனது கிளாமர் அழகை ரசிகர்களுக்கு காட்டி வருவது வழக்கமாக வைத்திருக்கிறார்.
தற்போது 34 வயதாகும் ரெஜினா கிளாமரான கவர்ச்சியில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட அவரின் கிளாமர் அழகை ரசித்து தள்ளி இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.