அப்பன் பன்ன தப்புல ஆத்தா பெத்த வெத்தல... மாடர்ன் கவர்ச்சியில் அதிர வைத்த அதிதி ஷங்கர்!
சினிமா துறையில் இயக்குனராக வேண்டும் என்ற ஒரு கனவோடும் லட்சியத்தோடும் திரை துறைக்கு வரும் பல துணை இயக்குனர்களின் குருவாக இருந்து வருபவர் தான் இயக்குனர் சங்கர். பிரம்மாண்டமான திரைப்படங்கள் இயக்கி பிரம்மாண்டத்திற்கு பெயர் போன இயக்குனராக இருந்து வரும் ஷங்கர் பல்வேறு வெற்றி திரைப்படங்களை எழுதி இயக்கி இருக்கிறார்.
விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் அது அத்தனையும் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாத வகையில் அவரது திரைப்படங்கள் இருக்கும். குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்த வகையில் படம் எடுப்பதில் சங்கரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என தனக்கென தனி பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
திரைப்படங்கள்:
அவரது திரைப்படங்கள் வெளிவந்தாலே அது பிரம்மிக்க செய்யும் அளவுக்கு நட்சத்திரங்களையும் நடிக்கும் திரை பிரபலங்களையும் செலக்ட் செய்வதிலும் அவர் பார்த்து பார்த்து குறிப்பாக ஒவ்வொரு காட்சியும் காட்சிப்படுத்தும் விதம் சங்கருக்கு இணையாக யாருமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு சக இயக்குநர்களே அவரை பார்த்து பிரமித்து போவார்கள் .அந்த வகையில் தமிழ் சினிமாவின் மாஸ்த்தான இயக்குனராக இருந்து வரும் இயக்குனர் சங்கர் 1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். அதை எடுத்து காதலன்,இந்தியன்,முதல்வன், ஜீன்ஸ், அந்நியன்,சிவாஜி தி பாஸ்,எந்திரன்,நண்பன் ,ஐ ,2.2 பல வெற்றி திரைப்படங்களை இயக்கி பிரபலமான இயக்குனராக இருந்து வருகிறார்.
இவரது மகள் தான் அதிதி ஷங்கர். இவர் தற்போது தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். முதன் முதலில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.மாடர்ன் உடையில் தெறிக்கும் கிளாமர்:
மருத்துவ பட்டப்படிப்பு நடித்திருந்தாலும் திரைத்துறையில் ஹீரோயினாக வேண்டும் என்ற ஒரு ஆசையில் திரைத்துறைக்கு வந்த அதிதி தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்ததுடன் பாடகியாகவும் அறிமுகமாகி தொடர்ந்து பாடல்களும் பாடி வருகிறார்.திரை துறையில் அறிமுகமான புதிதில் ஹோமிலியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த அதிதி தற்போது மாடல் அழகியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் கூட அவர் மாடர்னாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.இந்நிலையில் தற்ப்போது மாடர்ன் உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் இயக்குனர் சங்கர் பெற்ற மகளா இது? என அவரின் அழகை பார்த்து வர்ணித்து கமெண்ட் செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்ஸ் சில பேர் "அப்பன் பன்ன தப்புல ஆத்தா பெத்த வெத்தல"என கமெண்ட் செய்து வந்திருக்கிறார்கள்.