பா. ரஞ்சித் குடிக்கு அடிமையாகி தற்கொலை முயற்சி.... ரசிகர்கள் வேதனை - நடந்தது என்ன?
பா. ரஞ்சித்:
இவரது படைப்புகள் கொஞ்சம் வழக்கம் போல் இல்லாமல் வித்தியாசமாக தென்பட்டதால் ரசிகர்களின் மனதை வெகுவாக ஈர்த்தது. அரசியல் களத்தில் முக்கியமாக அரசியல் குறித்த படமும் சாதி சமூகம் சமூக சீர்கேடுகள், சாதி பிரச்சனை உள்ளிட்டவற்றை பற்றி படம் எடுப்பதால் ரஞ்சித் மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
இவர் அரசியல் செயல்பாட்டாளராகவும் அம்பேத்கரின் தத்துவத்தை முன்வைத்து படங்களை எடுத்து வந்ததால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஒரு குறிப்பிட்ட இனத்தவரின் ஃபேவரைட் இயக்குனராகம் இருந்து வருகிறார் .
சமூக செயல்பாடுகளை முன்வைத்து கருத்து சொல்லும் படங்களை எடுக்கும் பா ரஞ்சித் இன்றைக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் இயக்குனர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் நீலம் ப்ரொடக்ஷன் என்ற கம்பெனியை நடத்தி வருகிறார் .
குடிக்கு அடிமை:
இந்த நிலையில் நீலம் ப்ரொடக்ஷன் தயாரிப்பில் நேற்று பாட்டில் ராதா என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் தயாரிப்பாளரும் இயக்குனருமான பா ரஞ்சித் பேசிய விஷயம் தான் தற்போது ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவலை அடையச் செய்திருக்கிறது .
அதில் அவர் கூறியதாவது இந்த படத்தில் வரும் அஞ்சலை தான் எனது அம்மா, எனது அப்பா என்னையும் எனது சகோதரர்களையும் உணவுக்காகவும் பணத்திற்காகவோ யாரிடம் கொண்டு போய் நிறுத்தியது கிடையாது. நாங்கள் உடுத்தும் உடை எங்களது கல்வியில் மிகவும் கவனமாகவே இருந்தார்.
இவ்வளவு செய்த எனது அப்பா குடி என வரும்போது தன்னை இழந்து விடுவார். ஒரு திருவிழா வந்தால் ஊரே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எனது அம்மா மட்டும் அழுது கொண்டே இருப்பார். எங்க அம்மா அழுவதை என்னால் பார்க்கவே முடியாது. அப்போது நான் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் இரவு எனது அம்மா அழுவதை பார்க்க முடியாமல் தவித்து வந்த நான் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று ஒரு எண்ணம் கூட எனக்கு வந்து யோசித்து இருக்கிறேன். எனது அப்பாவை அதிலிருந்து மீட்டுக் கொண்டு வர எனது அம்மா அண்ணன் மற்றும் தம்பிகள் தான் மிகவும் கஷ்டப்பட்டார்கள் .
நான் வீட்டிலேயே இருக்க மாட்டேன். இந்த கஷ்டம் என்னை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி கொண்டே இருந்தது. ஆனாலும் என்னுடைய அப்பாவிற்கு இன்னும் கொஞ்சம் என்னுடைய அப்பா இன்னும் கொஞ்ச நாள் வாழ வேண்டும்டா என என்னிடம் கூறியிருக்கிறார்.
தற்கொலைக்கு முயற்சி:
மருத்துவர்கள் எனது அப்பா என்னும் ஆறு மாதங்கள் வரை தான் உயிரோடு இருப்பார் என கூறினார்கள். ஆனால், அவர் ஒரு வாரத்திலேயே இறந்து விட்டார். எனது அம்மா அழுது கொண்டிருந்தது போல் எனது மனைவியும் எனது குழந்தையும் அழவேக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என கண்கலங்கி கண்ணீருடன் பேசினார்.
அவரது இந்த பேச்சை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து போய் விட்டார்கள். தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராகம் தயாரிப்பாளராகவும் உச்ச அந்தஸ்தில் இருக்கும் பா ரஞ்சித் இவ்வளவு பெரிய சோகங்களையும் கஷ்டத்தங்களையும் அனுபவித்து வந்திருக்கிறாரா வாழ்க்கையில் என கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள் அதிர்ந்து போய் விட்டார்கள்.