பெண் குழந்தைக்கு அப்பா? சினேகனுக்கு கொட்டி குவியும் வாழ்த்துக்கள்!
சினேகன்:
பிரபல பாடலாசிரியர் ஆன சினேகன் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் வரிகள் எழுதியும் திரைப்பட வசனங்கள் எழுதிய மிகவும் பிரபலமான கவிஞராக இருந்து வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலமாக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
அதற்கு முன்னதாகவே பல்வேறு படங்களுக்கு பாடல் பாடியிருந்தார்.பாடல் வரிகள் எழுதி இருந்தாலும் சிநேகனை பிரபலப்படுத்தியது என்னவோ கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி தான்.
இந்த நிகழ்ச்சியில் மிகச் சிறப்பாக விளையாடிய பாடலாசிரியர் சினேகன் விவசாய குடும்பத்தில் மிகவும் எளிமையாக பிறந்து வளர்ந்தவர். எட்டாவது மகனாகப் பிறந்த இவருக்கு ஆறு மூத்த சகோதரர்களும் ஒரு மூத்த சகோதரியும் இருக்கிறார். ஆரம்பத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் 2000 ஆண்டு பாடல் எழுதத் தொடங்கினார்.
பாடல்கள்:
இவர் கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக பணியாற்றிய பிறகு புத்தம் புது பூவே திரைப்படத்தில் பாடல் ஆசிரியராக அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டில் யோகி திரைப்படத்தில் நடிகராகவும் நடித்த அறிமுகமாக இருந்தார். இவரது பாடல் வரிகள் பாண்டவர் பூமி , சார்லி சாப்ளின், மௌனம் பேசியதே, ஏப்ரல் மாதத்திலே, பகவதி சாமி, கோவில், புதுக்கோட்டையில் இருந்து சரவணன், ஆட்டோகிராப் , பேரழகன் , மன்மதன், ராம் குண்டக்க மண்டக்க அகர பருத்திவீரன் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
சினேகன் பிக் பாஸில் கலந்து கொண்ட போது கூட தனக்கொரு காதலி இருக்கிறார் என்பதை பொதுவெளியில் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. பல வருட காதலை மிகவும் ரகசியமாக பூட்டி பூட்டி வைத்திருந்த சினேகன் பிக் பாஸி சில் இருந்து வெளியில் வந்து சில வருடங்கள் கழித்து தமிழ் நடிகையான கன்னிகா என்பவரை தான் காதலித்து வருவதாக அவரை திருமணம் செய்து கொள்ள போவதாக திருமண அறிவிப்போடு தன்னுடைய காதலையும் அறிமுகப்படுத்தி இருந்தார் .
பெண் குழந்தை:
அப்போதுதான் அவரது காதலி என்பதை பலரும் கண்டு அதிர்ச்சியாகினார்கள். அதன் பிறகு இவர்கள் திருமணம் செய்து கொண்டு மிகுந்த மகிழ்ச்சியாக சிறந்த ஜோடியாக வாழ்ந்த வருகிறார்கள். அப்போது சமூக வலைதளங்களில் தங்களது அழகழகான காதல் வீடியோக்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்கள் .
இந்த நிலையில் கனிகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். அவருக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தார் சினேகன். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. மேலும் அதன் வீடியோ இணையத்தில் வெளியாக கன்னிகா கர்ப்பமான வயிறு பார்ப்பதற்கு உருண்டை வடிவத்தில் இருப்பதால் நிச்சயம் அவருக்கு பெண் குழந்தை தான் பிறக்கும் என பெருவாரியான ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதை அடுத்து சினேகன் நிச்சயம் ஒரு பெண் குழந்தைக்கு தான் அப்பாவாக போகிறார் என்பதை யோசித்து அவருக்கு முன்கூட்டியே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.