"விவாகரத்து" பற்றி பேசிய அஜித் - திடீரென வைரலாகும் வீடியோ!
விடாமுயற்சி:
குறிப்பாக விடாமுயற்சி மற்றும் குட் பேட் அகலி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். வருகிற பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் உலகெங்கும் தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 16ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படத்தின் டிரைலர் 6:40 மணிக்கு வெளியாகியிருந்தது.
இந்த ட்ரெய்லர் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த ட்ரைலரில் வழக்கம் போலவே அஜித்தின் மேனரிசங்களுடன் வெளியாகி அஜித் ரசிகர்களை கொண்டாட செய்தது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிக அளவில் அதிகரிக்கச் செய்திருக்கிறது.
இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வரும் நிலையில் இந்த ட்ரெய்லரில் அஜித் பேசிய ஒரு வசனம் தான் தற்போது சமூக வலைதளங்கள் எங்கும் வைரலாகி வருகிறது. அதாவது அந்த ட்ரெய்லரில் விவாகரத்து குறித்து பேசி இருக்கிறார் .
அஜித் த்ரிஷா காம்போ:
இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட பல வருடங்கள் கழித்து அஜித் மற்றும் திரிஷா காம்போ இணைந்து இருக்கிறார்கள். அஜித் திரிஷா இருவரும் இணைந்து கிரீடம் மங்காத்தா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் அஜித் மற்றும் திரிஷா இருவரும் இணைந்து நடிப்பதால் அவர்களின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் விடாமுயற்சி திரைப்படத்திற்காக காத்திருக்கிறார்கள். கடந்த 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தான் ஜீ திரைப்படம் வெளியாகியிருந்தது .
அதன் பின்னர் 10 வருடங்கள் கழித்து 2015 ஆம் ஆண்டு பிப்ரவரியில் என்னை அறிந்தால் திரைப்படம் வெளியாகியது. அதே போல் 2025 ஆம் ஆண்டு விடாமுயற்சி திரைப்படம் 10 வருடங்களுக்கு ஒரு முறை அஜித் திரிஷா காம்போவில் வெளிவருகிறது என ரசிகர்கள் இதனை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அஜித் இந்த ட்ரெய்லரில் பேசி இருக்கும் வசனம் ஆவது
விவாகரத்து பற்றி அஜித்:
திரிஷாவிடம் எனக்கு இந்த ஜெனரேஷன் பற்றி தெரியாது. ஆனால் நாங்க சின்ன புள்ளையா இருக்கும்போது வாட்ச் கெட்டு போச்சுன்னா ரிப்பேர் பண்ணுவோம். டிவி கேட்டு போச்சுன்னா ரிப்பேர் பண்ணுவோம். தூக்கி போட மாட்டோம் என்கிற டயலாக்கை அஜித் பேசுகிறார்.
இந்த வசனம் தான் தற்போது சமூக வலைதளங்கள் முழுக்க வைரல் ஆகி வருகிறது. காரணம் சமீப நாட்களாக பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்த விவாகரத்துகள் செய்து வருவதால் அஜித்தின் இந்த வசனம் அதற்கு பக்கமாக பொருந்துவதாக கூறியிருக்கிறார்கள்.
மேலும் அஜித் நிஜ வாழ்க்கையில் மனைவி குடும்பம் என மிகவும் அமைதியான அன்பான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.. அவர் இந்த வசனத்தை கூறி அட்வைஸ் செய்திருப்பது பக்காவாக அவருக்கு ஆப்ட்டாகிறது என ரசிகர்கள் பலரும் இதனை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
எனவே கணவன் மனைவிக்குள் ஏதாவது பிரச்சனை என்றால் பேசி சரி செய்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு எடுத்தோம் கவிழ்த்தோம் என விவாகரத்து எனக் கூறி உறவுகளை தூக்கி வீசக்கூடாது என ரசிகர்கள் அஜித் வசனத்தை வைத்து அறிவுரை கூறி வருகிறார்கள்.