Happy Birthday: அப்பா கடன் அடைக்க நடிக்க வந்த விஜய் சேதுபதி!! இன்று சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் புதிய பரிமாணத்தோடு நடிக்க வந்து இன்று மிகப்பெரிய நட்சத்திர நடிகராக மிகப்பெரிய உச்ச அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகர் தான் விஜய் சேதுபதி. இவர் சினிமா துறையில் இருந்த ஆர்வத்தால் கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமைகளை மேற்கேற்றி தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளை தவறவிடாமல் தன்னுடைய மிகச் சிறந்த நடிப்பை ஒவ்வொரு திரைப்படத்திலும் வெளிப்படுத்தி வந்ததன் மூலமாக மக்களின் கவனத்தை ஈர்த்தார்.
தன்னுடைய அப்பா வாங்கியே 10 லட்சம் ரூபாய் கடனை அடைப்பதற்காக வெளிநாட்டிற்கு வேலை சென்ற விஜய் சேதுபதி அந்த கடனை அடைப்பதற்காக மட்டும் வேலை செய்துவிட்டு பிறகு நடித்து தன்னுடைய ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் அந்த தொழிலை விட்டுவிட்டு சென்னைக்கு வந்து கூத்துப்பட்டறையில் வேலை வேலையை தொடங்கி அதன் மூலமாக நடிப்பு பயிற்சியை கற்றுக்கொண்டார்.
கூத்துப்பட்டறையில் பயிற்சி:
பின்னர் கூத்து பட்டறையில் கணக்காளராக பணியாற்றிய விஜய் சேதுபதிக்கு சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க அதை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு ஒவ்வொரு வாய்ப்புகளையும் தவறவிடாமல் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இன்று நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.
ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று ஒற்றை காலில் நின்று வாழ்க்கையை இழந்துவிடும் பல நடிகர்களுக்கு மத்தியில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் என்னுடைய நடிப்பை சிறப்பாக கொடுப்பேன் என்ற ஒரு முனைப்பில் விஜய் சேதுபதி நடித்து வந்தார் .
அப்படித்தான் இவர் வில்லன் கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கினார். குறிப்பாக மாதவனுடன் அவர் நடித்த விக்ரம் வேதா திரைப்படம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து விஜய் , ரஜினி உள்ளிட்டவர்களின் திரைப்படங்களில் வில்லனாக நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்தார்.
பிறந்தநாள்:
இந்த நிலையில் இன்று தனது 46 -வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள விஜய் சேதுபதியின் சொத்து மதிப்பு குறித்த விவரம் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்து வருகிறது. அதாவது விஜய் சேதுபதிக்கு உலக அளவில் கிட்டத்தட்ட ரூ140 கோடிக்கு மேல் சொத்து உள்ளதாக கூறப்படுகிறது.
கடைசியாக இவரது நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி திரைப்படம் ஆக பார்க்கப்பட்ட படம் தான் மகாராஜா. இந்த திரைப்படம் உலக அளவில் ரூ. 200 கோடி வசூலை ஈட்டி மாபெரும் சாதனை பெற்றிருந்தது இதனுடையே அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் அதில் கணிசமான வருமானத்தை சம்பாதித்து வருகிறார்.
சொத்து மதிப்பு:
இது தவிர விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க ரூ. 15 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக ரூ. 60 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். சென்னையில் 50 கோடிக்கு பெரிய பங்களா ஒன்று இதில் அடங்கும். மேலும் விஜய் சேதுபதி 1.78 கோடி மதிப்பில் BMW 7 சீரிஸ் காரை வைத்திருக்கிறார். மேலும், சில கார்களும் அவருக்கு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.