எனக்கு அது பெருசா இருக்கு... அவமானப்பட்டு பூமிகா எடுத்த அதிரடி முடிவு!



நடிகை பூமிகா: 

2000 காலகட்டங்களில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக ரவுண்டு கட்டி வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை பூமிகா சாவ்லா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின் என்ற இடத்தை தக்கவைத்துக் கொண்டு இருந்தார் .

தமிழில் 2000 ஆண்டில் எவ கூடு என்ற படத்தில் நடித்த தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தெலுங்கில் அவரது இரண்டாவது திரைப்படம் குஷி. இது அவருக்கு மிகச் சிறந்த வெற்றியை தேடி கொடுத்தது. இதனால் இரண்டாவது திரைப்படத்திலேயே சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது பெற்றார் பூமிகா.

தமிழ் படங்கள்: 

தமிழில் பத்ரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பூமிகா தொடர்ந்து ரோஜா கூட்டம் சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். சூர்யா ஜோதிகா நடிப்பில் வெளிவந்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் பூமிகா சூர்யாவின் காதலியாக நடித்து ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் அசத்திருப்பார்.

இன்று வரை அந்த கதாபாத்திரம் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறது அந்த அளவுக்கு பூமிகாவின் நடிப்பு ரசிகர்களின் மனதை கவர்ந்து சென்றது. இப்படி தமிழ் ஹிந்தி தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் அவர் எம் எஸ் தோனி அண்ட் டோல் ஸ்டோரி திரைப்படத்தில் அவரின் அக்காவாக கூட நடித்திருந்தார் .

எனக்கு அது பெருசா இருக்கு...

46 வயதாகும் நடிகை பூமிகா ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்காததால் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதாவது ஹீரோவுக்கு அக்காவாகவும் ஹீரோயின்களுக்கு அக்காவாகவும் நடித்து வருகிறார் .


அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த பிரதர் திரைப்படத்தில் அவர்களின் அக்காவாக பாசம் மிகுந்த சகோதரி ஆக நடித்தது  அசத்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தை பேட்டி ஒன்றில் சிறுவயதில் தான் பட்ட அவமானம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார் நடிகை பூமிகா.

அந்த பேட்டியில் அவர் கூறியதாவது என்னுடைய உதடு மிகப்பெரிய உதடு. அதனால நான் சிறுவயதில் சந்திக்காத கேலி கிண்டல் கிடையாது. நிறைய பேர் என்னுடைய உதடு குறித்து கேலி செய்வார்கள். இதனால் நான் ஒரு கட்டத்தில் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி ரொம்பவே அழுத்திருக்கிறேன்.

அவமானம்: 

ஆனால், அந்த உதட்டிற்கு நான் பெரிதாக ஆபரேஷன் எதுவும் செய்யவில்லை. இன்று அந்த பெரிய உதடு தான் எனக்கு அடையாளமாக இருக்கிறது என மனம் நெகிழ்ந்து பேசினார் பூமிக்கா. தொடர்ந்து பேசிய அவர் பாலிவுட்டில் பட வாய்ப்புகள் வந்தபோது நான் மற்ற மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் என்னால் நடிக்க முடியவில்லை.

அந்த நேரத்தில் பல நல்ல கதைகள் என்னை தேடி வந்தன.ஆனால், அதன் பிறகு நான் எதிர்பார்த்த விஷயங்கள் படத்தில் இல்லை. சில கதாபாத்திரம் எனக்கு பொருந்தவும் இல்லை. இதனால் 

பாலிவுட்டில் எனக்கு மிகப்பெரிய இடைவெளி விழுந்து விட்டது. இருந்தாலும் நான் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதில் அதிக ஆர்வத்தை செலுத்தி வருகிறேன்.

Blogger இயக்குவது.