ரொம்ப Worst!! ஐஸ்வர்யா ராயிடம் அது சுத்தமா பிடிக்காது.... போட்டுடைத்த நாத்தனார்!!


ஐஸ்வர்யா ராய்: 

உலக அழகியும் இந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகையான ஐஸ்வர்யா ராய் பாலிவுட் சினிமாவில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

இவர் தமிழ், பெங்காலி, ஆங்கிலம் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்திருக்கிறார். முதன்முதலில் மாடல் அழகியாக இருந்து வந்த ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டு பட்டம் தட்டிச் சென்றார் .

நடிகையாக அறிமுகம்: 

அதை எடுத்து தமிழ் சினிமாவில் தான் இவரது இவரது முதல் நடிப்பு பயணம் தொடங்கியது. மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த "இருவர்"  திரைப்படத்தின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராய். ஆம்,  இவரை அறிமுகம் செய்து வைத்தது மணிரத்தினம் தான்.

அதை அடுத்து ஒரு சில திரைப்படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். குறிப்பாக அவரது நடிப்பில் வெளிவந்த ஜீன்ஸ் கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி திரைப்படமாக பார்க்கப்பட்டது. ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பெயர் எடுத்திருக்கிறார்.

திருமணம்: 

விக்ரம் உடன் இராவணன் ரஜினியுடன் இந்திரன் உள்ளிட்ட மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்ததன்  மூலமாக ஐஸ்வர்யாராய் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை தமிழிலும் உருவாக்கிக்கொண்டார். இதனிடையே அவர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

அபிஷேக் பச்சன் பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஹீரோவாக இருந்து வருகிறார். நட்சத்திர மருமகளாக குடும்ப வீட்டில் மருமகளாக ஐஸ்வர்யா ராய் சென்ற பிறகு சில ஆண்டுகள் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு ஆரத்யா என்ற மகளும் பிறந்தார் .

பிறகு சில வருடங்கள் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்னதாக பிரபல நட்சத்திர நடிகர் சல்மான் கானை காதலித்து பிரிந்தார். அதன் பின்னர் ஐஸ்வர்யா ராய் பிரபல நடிகர் விவேக் ஓபராய்யை காதலித்து வந்தார் .

அவரையும் பிரிந்து விட்டு கடைசியில் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இதனிடையே அபிஷேக் பச்சனை ஐஸ்வர்யா ராய் கடந்த சில நாட்களாக பிரிந்து வாழ்வதாகவும்  அவர்கள் இருவரும் விவாகரத்து செய்யப் போவதாகவும் அதற்கு மிக முக்கிய காரணம் ஐஸ்வர்யா ராய் மாமனார் மாமியார் ஆன அமிதாபச்சன் மற்றும் ஜெயா பச்சன் தான் காரணம் என்றெல்லாம் செய்திகள் வெளியாக வரும் பரபரப்பாக பேசப்பட்டது .

நாத்தனார் பேட்டி: 

ஆனால், அதெல்லாம் பொய்யான வதந்தி என்று ஐஸ்வர்யா ராய் மறுத்தார். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் ஐஸ்வர்யா ஐஸ்வர்யா ராயின் நாத்தனாரான ஸ்வேதா பச்சன் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா ராய் குறித்து பேசி உள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

அதாவது ஐஸ்வர்யா ராயிடம் உங்களுக்கு பிடித்த விஷயம் பிடிக்காத விஷயம் எது? என கேள்வி கேட்டதற்கு பதில் அளித்த அவர், "ஐஸ்வர்யா ராய் உழைத்து முன்னேறியவர். ரொம்பவே பலமான பெண். அருமையான தாய். அது எனக்கு அவரிடம் பிடித்த விஷயம். 

அதே போல் அவரிடம் சீலம் பிடிக்காத விஷயங்களும் இருக்கின்றன. அதாவது, அவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாலோ இல்லை ஃபோன் செய்தாலோ அதற்கு உடனே ரெஸ்பான்ஸ் செய்யவேமாட்டார். அவருக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போதுதான் மீண்டும் மெசேஜோ காலோ செய்வார்" என ஸ்வேதா பச்சன் கூறியுள்ளது திரைத்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Blogger இயக்குவது.